Vani bhojan: பிரியா பவானி சங்கர்மீது எனக்கு பொறாமை இல்லை.. வாணி போஜன் அதிரடி!
சென்னை: நடிகை வாணி போஜன் நடிப்பில் அடுத்ததாக லவ் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து அவர் நடித்துள்ளார்.
முன்னதாக இந்தக் கூட்டணியில் வெளியான மிரள் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது.
இந்த மாதம் 28ம் தேதி லவ் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படம் பரத்தின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர்மீது தனக்கு பொறாமை இல்லை என வாணி போஜன் பேட்டி: நடிகர் பரத் -வாணிபோஜன் கூட்டணியில் வரும் ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லவ். முன்னதாக இவர்கள் கூட்டணியில் வெளியான மிரள் படமும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்த நிலையில், தற்போது லவ் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ரிலீசுக்கு சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. ட்ரெயிலர் மிரட்டலான வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
படத்தில் விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் போன்றவர்களும லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருவேறு உலகங்களில் பயணிக்கும் இருவருக்குள் ஏற்படும் காதல் மற்றும் அதை தொடர்ந்த பிரச்சினைகள் எப்படி கொலையில் முடிகிறது என்பதாக கதைக்களம் காணப்படுகிறது. பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பரத்தின் 50வது படமாக லவ் வெளியாகவுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் பாஸ்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் பரத் அறிமுகமான நிலையில், தற்போது அவர் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்துள்ளார். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இசை நிகழ்ச்சியில் பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோர் சிறப்பான பேச்சுக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய வாணி போஜன், சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு தாவிய தனக்கும் பிரியா பவானி சங்கருக்கும் இடையில் எந்தவிதமான போட்டியும் பொறாமையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். பிரியா பவானி சங்கர், முன்னணி ஹீரோயினாக முன்னணி நடிகர்களுடன் நடித்துவருவது ஒரு தோழியாக தனக்கு மகிழ்ச்சியையே தருவதாகவும் கூறியுள்ளார். தன் வழியில் தானும் அவரது வழியில் அவரும் சென்றுவருவதாகவும் வாணி போஜன் மேலும் கூறியுள்ளார்.
சன் டிவியின் தெய்வமகள் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் வாணி போஜன். இவர் கடந்த 2019ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான மீக்கு மாத்திரமே செப்தா என்ற படத்தில் தன்னுடைய அறிமுகத்தை துவங்கி தொடர்ந்து தமிழில் ஓ மை கடவுளே படத்திலும் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக வொர்க் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











