ப்ரியா பவானிசங்கரை அடுத்து கோலிவுட்டில் ஹீரோயின் ஆன தெய்வமகள் சத்யா
சென்னை: தெய்மகள் சத்யா பெரியதிரையில் ஹீரோயினாகியுள்ளார்.
சின்னத்திரை பிரபலங்கள் பெரியதிரைக்கு வருவது புதிது அல்ல. கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் பிரபலம் ப்ரியா பவானிசங்கர் தற்போது கோலிவுட் ஹீரோயினாக உள்ளார்.
இந்நிலையில் மேலும் ஒரு டிவி பிரபலம் ஹீரோயினாகியுள்ளார்.

வாணி போஜன்
தெய்வமகள் தொலைக்காட்சி தொடரில் சத்யாவாக நடித்து பிரபலமானவர் வாணி போஜன். அவர் தற்போது கோலிவுட்டில் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.
என்.ஹெச்.4
தான் ஹீரோயினாகியுள்ளதை வாணி போஜன் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். என் மகன் மகிழ்வன் படத்தை இயக்கிய லோகேஷின் இரண்டாவது படத்தின் ஹீரோயினாகியுள்ளார் வாணி. அந்த படத்திற்கு என்.ஹெச்.4 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி
விருது பெற்ற இயக்குனரின் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளார் வாணி. எங்க சத்யாவை பெரிய திரையில் பார்க்க ஆவலாக உள்ளோம் என்கிறார்கள் சீரியல் பிரியைகள்.
வாழ்த்துக்கள்
வாணி போஜனின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த ரசிகைகள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வாழ்த்துக்கள் வாணிமா என்று தெரிவித்துள்ளனர்.
ஆரம்பிக்கலாமா?
வாணி ஹீரோயினாகியுள்ள செய்தி அறிந்த ரசிகர் ஒருவர் வாணி போஜன் ரசிகர் மன்றம் துவங்கிவிடலாமா என்று கேட்டுள்ளார். இருந்தாலும் நீங்க ரொம்ப ஃபாஸ்ட் பாஸு.


Click it and Unblock the Notifications











