சின்னத்திரை நயன்தாரா.. வெள்ளித்திரை வாணி போஜன்.. அடுத்து யாருக்கு ஜோடி ஆகப்போகிறார் தெரியுமா?

சென்னை: தெய்வமகள் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய்சேதுபதி, கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.

ஓ மை கடவுளே படத்தைத் தொடர்ந்து நடிகை வாணி போஜன் அடுத்ததாக அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழுக்கு முன்

தமிழுக்கு முன்

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன், வெள்ளித்திரையில் தமிழுக்கு முன்னதாக டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான மீக்கு மாத்ரமே செப்தா படத்தின் மூலம் அறிமுகமாகி விட்டார். தற்போது ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சேலையில் செம்ம ஹாட்

ஜீ தமிழ் விருது விழாவில் நயன்தாரா மட்டும் இல்லைங்க வாணி போஜனும் சேலையில் செம்ம ஹாட்டாகவும் க்யூட்டாகவும் வந்திருந்தார். ஜீ தமிழ் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரசிகர்களின் லைக்குகளையும் அன்பையும் பெற்றார்.

காதலர் தினம்

காதலர் தினம்

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்தில் அறிமுகமாகிறார் க்யூட் டால் வாணி போஜன். இப்படி ஒரு கோலிவுட் என்ட்ரியை வாணி போஜன் எப்போதும் மறக்க மாட்டார். இந்த படத்தில் அசோக் செல்வனின் சிறு வயது காதல் கிரஷ்சாக வாணி போஜன் நடித்து அசத்தியுள்ளார்.

சீரியல் டு சினிமா

சீரியல் டு சினிமா

முன்பெல்லாம், சினிமாவில் மார்க்கெட் காலியானால், நடிகைகள் சீரியலுக்கு செல்வார்கள். ஆனால், தற்போது சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரிசையாக நடிகைகள் அப்கிரேட் ஆகி வருகின்றனர். மேயாத மான் படத்தின் மூலம் சீரியலில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த பிரியா பவானி சங்கர் போல வாணி போஜனும் கோலிவுட்டில் கலக்க உள்ளார்.

யார் கூட?

யார் கூட?

ஓ மை கடவுளே படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்ததாக வாணி போஜன் எந்த படத்தில் யாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற ஆவல் அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, அதர்வா நடிப்பில், புது முக இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒத்தைக்கு ஒத்த

ஒத்தைக்கு ஒத்த

பூமராங், 100 படங்களுக்கு பிறகு ஆளே காணாமல் போன அதர்வா, ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், நின்னு கோரி ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பர்னேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஒத்தைக்கு ஒத்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X