கணவர் மரணம்: கவலையில் வாடும் பாடகி வாணி ஜெயராம்

By Siva

சென்னை: பிரபல பாடகி வாணி ஜெயராம் தனது கணவரை இழந்து வாடுகிறார்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் பாடகி வாணி ஜெயராம். பி. சுசீலா கொடி கட்டிப் பறந்த காலத்தில் தனக்கென்று ரசிகர்களை வைத்திருந்தார் வாணி ஜெயராம்.

Vani feels helpless without husband Jayaram

திரையுலகில் பிரபலமானவராக இருந்தாலும் கணவர் ஜெயராம் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார். அவர்களின் அன்பை பார்த்து வியந்தவர்கள் பலர் உண்டு. அப்படி ஒன்றி இருந்த அவர்களின் வாழ்வில் மரணம் வழியாக பிரிவு ஏற்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயராம் காலமானார். கணவர் உயிருக்கு போராடிய போது கூட அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் வாணி.

[ ஆடையை அவிழ்த்துவிட்டு ஆடச் சொன்னார்: இயக்குனர் மீது நடிகை பரபர புகார் ]

ஜெயராம் இல்லாத வாழ்க்கையை வாழ அவர் கஷ்டப்படுகிறார். அவர் இல்லாத உலகில் வாழ தெம்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அவரும், ஜெயராமும் எப்படி பாசமாக இருந்தார்கள் என்பது தெரிந்தவர்களுக்கு அவருக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முடியவில்லை.

கணவரை இழந்து வாடும் வாணிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X