கமல் ஹாசன் வெறி பிடித்த மனிதர் போல் நடந்துகொள்கிறார்.. மனம் திறந்து ஓபனாக பேசிய முன்னாள் மனைவி
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. தற்போது அவர் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம் அடுத்த வருடம் ரிலீஸாகவிருக்கிறது. தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு அவர் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே அவர் வாணி கணபதி மற்றும் ரேகாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். இந்தச் சூழலில் அவரது முதல் மனைவி வாணி கணபதி கமல் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
இந்திய சினிமாவில் கமல் ஹாசன் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிய தாக்கம். அவர் போன்று நடிக்க வேண்டும் என்று எல்லோரும் விருப்பப்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர் போலெல்லாம் நடிக்கவே முடியாது என்று எல்லோரும் சொல்லவும் செய்வார்கள். அந்த அளவுக்கு அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். இடையில் அவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு சென்றார். பிறகு விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது.

அடுத்த படங்கள்: விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். அடுத்த வருடம் படம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் அவர். அதுமட்டுமின்றி தயாரிப்பிலும் பிஸியாக இருக்கும் அவர் அமரன் படத்தை தயாரித்தார். சிம்புவின் 48ஆவது படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் திருமணங்கள்: கமலை பொறுத்தவரை தனது பெர்சனல் வாழ்க்கையை ஓபனாகவே வைத்திருப்பவர். முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் பாதியில் முடிந்தது. அடுத்தது ரேகாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பிறகு கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் இருந்து வெளியே வந்தார். இதற்கிடையே நடிகை ஸ்ரீவித்யாவும் கமல் ஹாசனும் தீவிரமாக காதலித்தார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்நிலையில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வாணி கணபதி பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "நாங்கள் விவாகரத்து பெற்று 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் இதுகுறித்து எப்போதுமே பொதுவெளியில் பேசியதே இல்லை. ஏனென்றால் இது ரொம்பவே தனிப்பட்ட விஷயம் என்று எனக்கு தெரியும். ஆனால் நாங்கள் இரண்டு பேரும் இப்போது பிரிந்துவிட்டோம். இருந்தாலும் கமல் மட்டும் ஏன் வெறி பிடித்த மனிதரை போல் நடந்துகொள்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் பகிர்ந்துகொண்ட குடியிருப்பிலிருந்து நாங்கள் பயன்படுத்திய உபகரணங்களைக்கூட எனக்கு கொடுக்க அவர் மறுத்துவிட்டார்.
என்ன எதிர்பார்க்க முடியும்?: அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம் நான் எதை எதிர்பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள். உலகத்தில் எந்த நீதிமன்றமன்றத்தில் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை படித்ததும் நான் அதிர்ச்சிதான் அடைந்தேன். நான் திருமணத்திலிருந்து வெளியேறியபோது அவரது ஈகோ கண்டிப்பாக காயப்பட்டிருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் இவ்வளவும் நடந்திருக்கிறது" என்றார். இந்தப் பேட்டி கமல் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட ஷாக்கை கொடுத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











