டிரெண்டிங்கில் வெண்ணிலா பாடல்.. ரசிகர்கள் வரவேற்பு!

சென்னை : வெள்ளை யானை படத்தில் வரும் வெண்ணிலா பாடல் தற்போது பிரபலமாகி வருகிறது.

திருடா திருடி படத்தை இயக்கியவர் தான் சுப்பிரமணியம் சிவா. இவரது படம் தான் வெள்ளை யானை இதில் சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு நடிக்கிறார்கள் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.

 Vanilla song in Trending

சந்தோஷ் நாராயணன் இசை பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது. ஜீவாவின் ஜிப்சி படத்திற்கு இவர் தான் இசை அமைத்தார் அதில் பாடல்கள் அனைத்தும் ஹிட். சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திற்கும் இவர் தான் இசை அமைத்துள்ளார்.

இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனுஷை வைத்து தனது முதல் திரைப்படமாக திருடா திருடி படத்தை இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் சிவா. பின் நான்கு ஆண்டுகள் கழித்து ஜீவாவை வைத்து பொறி என்ற படத்தை இயக்கினார் சுப்பிரமணியம் சிவா.

 Vanilla song in Trending

இயக்குனர் அமீரை வைத்து இவர் எடுத்த திரைப்படம் தான் யோகி இதில் அமீரின் கதாபாத்திரத்தை பலரும் பாராட்டினர். இதன் பின் மீண்டும் சீடன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கினார் சுப்பிரமணியம் சிவா. இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது.

 Vanilla song in Trending

இயக்குனராக மட்டுமின்றி வட சென்னை மற்றும் அசுரன் படங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார் சுப்பிரமணியம் சிவா. அமலா பால் நடித்த அம்மா கணக்கு படத்தில் வசனமும் எழுதி உள்ளார்.

 Vanilla song in Trending

தற்போது இப்பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். சந்தோஷ் நாராயணன் இசையில் உமாதேவியின் வரிகளில் விஜய் நரைன் மற்றும் சங்கீதா ஆகிய இருவரின் காந்த குரலில் வெளியாகி உள்ள பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் பாடலாசிரியராக இயக்குனர் ராஜு முருகன் பணியாற்றி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X