மிடில் கிளாஸ் ஆம்பளைங்களும் பொம்பளைங்களும்தான் தப்பு பண்றாங்க.. நாங்க இல்ல.. ஏழரையை கூட்டும் வனிதா!
சென்னை: நார்மல் மிடில் கிளாஸ் ஆண்களும் பெண்களும்தான் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் தப்பு செய்கிறார்கள் என நடிகை வனிதா குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஆனால் அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் பீட்டர் பால் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என புகார் அளித்தார்.
இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பிரச்சனை ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மிடில் கிளாஸ் மக்கள்
அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களை விளாசும் வகையிலும் தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ளார் வனிதா. தன்னைப் பற்றி கமெண்ட் செய்தவர்களையும் விளாசிய வனிதா, மிடில் கிளாஸ் மக்களையும் விட்டு வைக்கவில்லை. மிடில் கிளாஸ் மக்கள்தான் தவறு செய்கிறார்கள் சினிமாக்காரர்கள் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

பொண்டாட்டின்னு சொல்றாங்க
அவர் பேசியிருப்பதாவது, 100 கோடி பேர்ல பல பேர் தப்பு பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. புருஷன்னு சொல்றாங்க வெளியே போய் தப்பு பண்றாங்க. பொண்டாட்டின்னு சொல்றாங்க கேர்ள் ஃபிரண்ட் வச்சுருக்காங்க. செகன்ட் வொய்ஃப் வச்சுருக்காங்க. கூடவே வாழ்ந்துட்டு இருக்காங்க திரும்ப வீட்டுக்கு போய்டுறாங்க.

சினிமாக்காரங்க இல்ல
இதெல்லாம் நடக்கலன்னு சொல்றீங்களா? எல்லாமே நடக்குது. சினிமாக்காரங்க யார் இப்படில்லாம் பண்றாங்க? சினிமாக்காரங்க யாரும் இப்படி பண்றது இல்ல. நார்மல், பப்ளிக், மிடில் கிளாஸ் மக்கள்தான் பண்றாங்க. அதையெல்லாம் அக்ஸப்ட் பண்ணுங்க. சமூகத்தில் நிறைய தவறுகள் நடக்குது.

நாள் முட்டாள் கிடையாது
சினிமாக்காரங்களுக்கு நடக்குறதால அது வெளியே தெரியுது. நாங்க தப்பு பண்ண முடியாது. ஒருத்தர வச்சுக்கிட்டே இன்னொருத்தர ஏமாத்த முடியாது. இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு வெளியே வந்துடும். இவ்ளோ தூரம் நான் பப்ளிசிட்டி பண்றேன்னா நான் அந்தளவுக்கு முட்டாள் கிடையாது.

முழுக்க முழுக்க பொய்
நான் நிஜமா அவர காதலிக்கிறேன் அவரு கூட வாழ விரும்புறேன். எனக்கு அதுல எந்த அவமானமும் தெரியல. அது எனக்கு தேவையும் இல்ல. இன்னொருத்தரோட குடும்பத்த சிதைச்சு நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு சொன்னா அது முழுக்க முழுக்க பொய். அவங்க ஏதோ கம்ப்ளையன்ட் கொடுத்திருக்கறதா கேள்வி பட்டேன்.

வனிதா கல்யாணம் பண்ணியதால்
ஏழரை வருஷம் பீட்டர் பாலை பிரிந்து இருப்பதாக போலீஸ் கம்ப்ளையன்ட்டில் தெளிவாக தெரிவித்துள்ளார். திடீர்னு காலையில எழுந்து, வனிதா பீட்டர நல்லவருன்னு சொல்லிட்டாங்க, அவங்க அவர லவ் பண்றாங்க, கல்யாணம் பண்ணிட்டாங்க, அதனால எனக்கு என் புருஷன் வேணும்னு கேட்டா என்ன அர்த்தம்.


Click it and Unblock the Notifications











