வரிசைக்கட்டும் படங்கள்.. புதிய படத்தில் நீயா நானா கோபிநாத்துடன் இணைந்த வனிதா!
சென்னை: நடிகை வனிதா விஜயயகுமார் புதிய படத்தில் நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார்.
பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

2கே அழகானது காதல்
குறிப்பாக பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார் நடிகை வனிதா. அனல் காற்று என்ற படத்தில் நடித்து வரும் வனிதா, ஹரி நாடாரின் 2கே அழகானது காதல் என்ற படத்திலும் நடிக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்
மேலும் இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்திலும் நடிகை வனிதா நடிக்கிறார். அண்மையில் சிவப்பு மனிதர்கள் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்தார் வனிதா.

புதிய படத்தில் வனிதா
இதேபோல் கொடூரன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறிய வனிதா, அந்த படத்தின் பூஜையில் பங்கேற்ற போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Recommended Video

விஜய்யின் மாமா
ஜீ.வி. பிரகாஷை வைத்து பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ், தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

நீயா நானா கோபிநாத்
ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான டாக்டர் கேரக்டரில் நீயா நானா புகழ் கோபிநாத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லீனாகுமார் நடிக்கிறார்.

4 பேருமே ஹீரோயின்ஸ்
மேலும் இந்த படத்தில் 4 முக்கிய கதாப்பாத்திரங்களில், அனிகா சுரேந்திரன், சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த நான்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை என்று கூறும் இயக்குனர் மணி நாகராஜ், 4 பேருமே அவர்களது பகுதியில் ஹீரோயின்கள் என தெரிவித்துள்ளார்.

ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி
16 வயது முதல் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. படத்தில் இன்னும் ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கியிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இப்படம் சென்னையிலேயே படமாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











