For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  40 வயதில் காதல்.. கல்யாணம்.. ஆபாச பேச்சு.. அடிதடி.. 3 மாதத்தில் முறிவு.. 2020ஐ அதிர வைத்த வனிதா!

  |

  சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் திருமணம், முறிவு, சண்டை சச்சரவு என அதிக சர்ச்சைகளில் சிக்கி 2020 ஆம் ஆண்டையே அதிர வைத்துவிட்டார்.

  2020ஆம் ஆண்டு பிறந்த வேகத்திலேயே கொரோனாவையும் கொண்டு வந்து உலக நாடுகள் பலவற்றையும் முடக்கியது. இந்த கொடிய கொரோனா அரக்கனால் பலரும் தங்களின் உறவுகளை இழந்தனர்.

  பலரும் வருமானம் இன்றி வறுமைக்கு தள்ளப்பட்டனர். அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்ட இந்த கொரோனாவால் 2020ஆம் ஆண்டையே வெறுக்கத் தொடங்கிவிட்டனர் மக்கள்.

  இந்த வருஷம் அப்படி எதிர்பார்த்த ரசிகர்கள்.. விளையாடிய வைரஸ்.. 2020ல் மிஸ்ஸான பிளாக்பஸ்டர் படங்கள்!இந்த வருஷம் அப்படி எதிர்பார்த்த ரசிகர்கள்.. விளையாடிய வைரஸ்.. 2020ல் மிஸ்ஸான பிளாக்பஸ்டர் படங்கள்!

  அதிரடி திருப்பங்கள்

  அதிரடி திருப்பங்கள்

  போட வேண்டிய ஆட்டத்தையெல்லாம் போட்டு விட்டு விடை பெற தயாராகிவிட்டது 2020ஆம் ஆண்டு. 2020ஆம் ஆண்டு பலரின் வாழ்க்கையையும் திருப்பிப்போட்ட நிலையில், நடிகை வனிதாவின் வாழ்க்கையிலும் பல்வேறு அதிரடி திருப்பங்களை நிகழ்த்தியது. கடந்த ஆண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயக்குமார் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். இதனால் அதிகம் பேசப்பட்டார்.

  பீட்டர் பாலுடன் திருமணம்

  பீட்டர் பாலுடன் திருமணம்

  அதைப்போலவே இந்த ஆண்டும் பெரும் பிரபலமானார். அதாவது, ஏதாவது ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார். தனது யூடியூப் சேனலின் விஷுவல் எடிட்டரான பீட்டர் பாலை காதலித்த வனிதா, கடந்த ஜூன் மாதம் லாக்டவுன் பீரியடில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

  கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி

  கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி

  ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பாலுக்கு மனைவி, கல்லூரி செல்லும் மகன் மற்றும் மகள் இருந்தனர். பீட்டர் பாலுக்கு வனிதாவுடன் திருமணம் ஆனதை அறிந்த முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தனது குழந்தைகளுக்கு அப்பாவாக பீட்டர் வேண்டும்ட என்றார். ஆனால் பீட்டரை விட்டு கொடுக்க முடியாது என்ற வனிதா, வேண்டுமென்றால் ரெண்டு பொண்டாட்டியாக இருக்கலாம்.. கடவுள்களுக்கே இரண்டு பொண்டாட்டிதான் என்றார்.

  வாயாலேயே ருத்ர தாண்டவம்

  வாயாலேயே ருத்ர தாண்டவம்

  தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் லைவில் லிப்லாக், கட்டிப்பிடி என எல்லை மீறினர். பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாய் பேசிய ரவீந்தர் சந்திரசேகர், நடிகை கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என எல்லோரையும் தகாத வார்த்தைகளாலும் ஆபாச பேச்சுக்களாலும் விளாசினார். வனிதா வாயாலேயே ருத்ரதாண்டவம் ஆடிய வீடியோக்கள் அனைத்தும் பெரும் வைரலானது.

  பீட்டருடன் கோவா டூர்

  பீட்டருடன் கோவா டூர்

  வனிதாவின் அடாவடியை பார்த்த பலரும் இது ரொம்ப நாள் நீடிக்காது என சாபம் விடாத குறையாக திட்டி தீர்த்தனர். இதனை தொடர்ந்து, பீட்டர் பால் பிறந்தநாள், வனிதா பிறந்த நாள் என பார்ட்டிகள் களைக்கட்டின. தனது 40வது பிறந்த நாளை கோவாவில் கொண்டாட குடும்பத்துடன் சென்றார் வனிதா. பீட்டருடன் படு நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் வெளியிட்டு வாங்கிக்கட்டினார்.

  ஏமாந்துவிட்டேன்

  ஏமாந்துவிட்டேன்

  ஆனால் அங்கேயே குடித்துவிட்டு பீட்டர் பால் ரகளை செய்ததாக தகவல் வெளியானது. மேலும் கோவாவில் இருந்து திரும்பும் போதும் மூச்சுமுட்ட குடித்துவிட்டு ரகளை செய்ததால் வந்த வேகத்தில் வீட்டை விட்டு விரட்டி விட்டார் வனிதா என அரசல் புரசலாக செய்திகள் பரவியது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கதறல் வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பாலால் தான் ஏமாந்து விட்டதாக கண்ணீர் விட்டார்.

  இருவரும் பிரிந்துவிட்டோம்

  இருவரும் பிரிந்துவிட்டோம்

  மேலும் தனக்கும் பீட்டர் பாலுக்கும் இடையில் நடந்தது திருமணமே இல்லை. இருவரும் பிரிந்துவிடோம் பீட்டர் பாலை எலிசபெத்தே வைத்துக்கொள்ளட்டும் நான் தொந்தரவு செய்யமாட்டேன். எலிசபெத் சொன்னது உண்மைதான் பீட்டர் ஒரு மொடா குடிக்காரர் என மூன்று மாதங்கள் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும் அவருக்கு செய்த மருத்துவ செலவுகள் குறித்தும் பட்டியலிட்டார்.

  Master படத்தை ரசிகர்களுடன் பார்க்க Vijay முடிவு | Pongal Release 2021
  பேசப்பட்ட பீட்டர் பால்

  பேசப்பட்ட பீட்டர் பால்

  வனிதாவின் மூன்றாவது திருமணம் எந்த அளவுக்கு செய்தியானதோ அதே அளவுக்கு அவரின் திருமண முறிவும் செய்தியானது. யார் என்றே தெரியாமல் இருந்த பீட்டர் பாலும் வனிதாவுடனான திருமணம் மற்றும் முறிவால் பெரும் பிரபலமாகிவிட்டார். வனிதா விரட்டிய பிறகு கூட இருக்க இடமில்லாமல் தவித்து வருவதாக செய்திகளில் அடிபட்டு வருகிறார் பீட்டர் பால். 2020ல் அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் பெரிய இடமுண்டு.

  English summary
  Flash back 2020: Vanitha's third marriage with peter Paul was such great news in 2020. But within 4 months their marriage life comes to an end. Vanitha and Peter paul are such a big news makers in 2020.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X