வனிதாவும் பீட்டர் பாலும் 'அந்த மாதிரி' வீடியோ கூட வெளியிடுவாங்க.. கிழித்து தொங்கவிட்ட எலிசபெத்!
சென்னை: நடிகை வனிதாவும் பீட்டர் பாலும் சேர்ந்து அந்த மாதிரி வீடியோ கூட வெளியிடுவார்கள் என சரமாரியாக விளாசியிருக்கிறார் எலிசபெத்.
Recommended Video
விவாகரத்து, குடும்பத்தகராறு, சொத்துப்பிரச்சனை, ராபர்ட்டுன் காதல், காதல் முறிவு என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி செய்திகளில் அடிப்பட்ட வனிதா விஜயக்குமார்.
கடந்த விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். சக ஹவுஸ் மேட்ஸ்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, பொய் சொல்வது என பிபியை எகிற வைத்தார்.

மூன்றாவது திருமணம்
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது யூடியூப் சேனலுக்காக தன்னிடம் வேலை பார்த்த பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த பீட்டர் பாலின் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமலேயே பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

பிரபலங்கள் விமர்சனம்
மேலும் இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் வனிதாவின் திருமண விவகாரம் பூதாகரமானது. வனிதாவின் திருமணத்தை திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் விமர்சித்தனர். விமர்சித்தவர்களை எல்லாம் லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் வனிதா.

பொம்பளை பொறுக்கி
அவர்களின் திருமணம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் பீட்டர் பால் ஒரு பொம்பளை பொறுக்கி, அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். அதோடு அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

மதுவுக்கு அடிமை
ஆனால் அதையெல்லாம் மறுத்த வனிதா, பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றார். இதனை தொடர்ந்து ஊடகத்திற்கு பேட்டியளித்த பீட்டர் பாலின் மகன், தனது அப்பா மதுவுக்கு அடிமையாகி இரண்டு முறை மறுவாழ்வு மையத்திற்கு போய் வந்ததாக கூறினார்.

விபச்சாரத்துக்கு செலவு
அதோடு தனது அப்பா குடிக்கும் விபச்சாரத்துக்கும் தான் அதிகம் செலவு செய்வார் என்றார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் ஊடகம் ஒன்றிற்கு மீண்டும் பேட்டியளித்துள்ளார். அதில் வனிதாவையும் பீட்டர் பாலையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

அந்த மாதிரி வீடியோ
அதாவது பீட்டர் பால் கிஸ் அடிக்க மட்டும் தான் வருவானா என ஏக வசனத்தில் பேசியிருக்கிறார். மேலும் பீட்டர் பால் வனிதாவின் பின்னால் நிற்கும் பொம்பளை என்றும் கூறியுள்ளார். வனிதாவும் பீட்டர் பாலும் சேர்ந்து அந்த மாதிரி வீடியோக்களை வெளியிடுவார்கள் என்றும் விளாசியிருக்கிறார்.

டான்ஸருடன் தொடர்பு
வனிதா மட்டுமின்றி விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் குரூப் டான்சராக இருந்த பெண்ணுடனும் பீட்டருக்கு தொடர்பிருந்ததாக கூறியிருக்கிறார் எலிசபெத். அது குறித்து தான் கேட்ட போது நீங்கள் இருவரும் சண்டை போடுங்கள் யார் ஜெயிக்கிறீர்களோ அவர்களுக்குதான் நான் என்று கூறி பீட்டர் கேவலமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வெளுத்து வாங்கியிருக்கிறார்
என்ன நடந்தாலும் பீட்டர் பால்தான் என் கணவர், என் குழந்தைகளுக்கு அப்பா, ஆகையால் அவர் எனக்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார் எலிசபெத். நேற்று முன்தினம் தான் வனிதா, யூட்யூப் பிரபலமான சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது போரூர் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் எலிசபெத் ஹெலன் வனிதாவையும் பீட்டர் பாலையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











