என்னது பவர் ஸ்டார் கூட கல்யாணம் ஆயிடுச்சா.. மாலை மாற்றிய போட்டோவை ஹார்ட்டின்களோடு ஷேர் செய்த வனிதா!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் கல்யாண கோலத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து பகீர் கிளப்பியுள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா. விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்தார். பின்னர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

மகன் அப்பாவுடன் செல்ல மகளுடன் வசித்து வந்தார் வனிதா. பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவருடன் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்ட வனிதா அவரையும் விவாகரத்து செய்தார்.

சிங்கிள் மதராக வனிதா

சிங்கிள் மதராக வனிதா

பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார் வனிதா. அவரைதான் மூன்றாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் என கூறப்பட்ட நிலையில் அவருடனான உறவும் முறிந்தது. இதனை தொடர்ந்து 2 மகள்களுடன் சிங்கிள் மதராக வசித்து வந்தார் வனிதா.

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

இந்த நேரத்தில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதிலும் பல சர்ச்சைகள் கிளம்ப மீண்டும் பெரும் பிரபலமானார் வனிதா. இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் வனிதா.

பீட்டருடன் காதல் திருமணம்

பீட்டருடன் காதல் திருமணம்

பின்னர் சமையல் நிகழ்ச்சிக்கான யூட்யூப் சேனலை தொடங்கினார். அப்போதுதான் தனது யூட்யூப் சேனலுக்காக பணியாற்றிய பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது. அவரை மூன்றாவது திருமணம் செய்தார் வனிதா. இந்த திருமணம் பெரும் சர்ச்சையான நிலையில், 4 மாதங்களுக்குள்ளேயே பீட்டரை பிரிந்தார் வனிதா.

மறுத்த நடிகை வனிதா

மறுத்த நடிகை வனிதா

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனிதா, வட நாட்டை சேர்ந்த பைலட் ஒருவரை திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் வெறும் வதந்தி என அதனை மறுத்தார் நடிகை வனிதா.

பவர் ஸ்டாருடன் திருமணம்?

பவர் ஸ்டாருடன் திருமணம்?

இந்நிலையில் நடிகை வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். And.. என பதிவிட்டுள்ள வனிதா 4 ஹார்ட்டின்களையும் ஷேர் செய்துள்ளார்.

நெட்டிசன்கள் கேள்வி

நெட்டிசன்கள் கேள்வி


மேலும் பவர் ஸ்டார் சீனிவாசனின் டிவிட்டர் ஹேண்டிலையும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்ததா? அல்லது பட ஷூட்டிங்கில் எடுத்த போட்டோவா என கேட்டு வருகின்றனர்.

என்ன ஷூட்டிங்

என்ன ஷூட்டிங்

வனிதா விஜயகுமார் ஷேர் செய்த போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், சும்மா இப்படி படத்தை மட்டும் போட்டு குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க. இது என்ன பட ஷூட்டிங்னு போடுங்க.. என பதிவிட்டுள்ளார்.

எந்தப் படத்துக்கு புரமோஷன்?

எந்தப் படத்துக்கு புரமோஷன்?

சிலர் எந்தப் படத்துக்கு இப்படி புரமோஷன் செய்கிறீர்கள் என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஹேப்பி மேரிட் லைஃப் ஆன்ட்டி அன்ட் அங்கிள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

Google ல sona னு Type பண்ணா இப்டிதான் வருது | Actress Sona Chat | Filmibeat Tamil
பவருக்கு ஃபியூஸ் போயிடும்

பவருக்கு ஃபியூஸ் போயிடும்

வனிதா ஷேர் செய்த திருமண போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், இது உண்மையானால் " சீனு வுக்கு கட்டம் சரியில்லை" ன்னு தோணுது... 'பவரு'க்கு fuse போயிடும் இனிமே.. என பதிவிட்டுள்ளார். வனிதா ஷேர் செய்துள்ள இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X