ராபர்ட்டுடன் திருமணம்?..கிண்டல் செய்றவங்க தற்கொலை செஞ்சுக்குவாங்க.. வனிதா காட்டமான பதிலடி
சென்னை: நடிகை வனிதா சில படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து அவர் பிக்பாஸ் வனிதா என்றே அழைக்கப்படுகிறார். அவரது மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க ரபார்ட் மாஸ்டரும், வனிதாவும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களுக்கு திருமணம் என்று பேச்சுக்களை கிளப்பியது. சூழல் இப்படி இருக்க இருவரும் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் பிக்பாஸில் கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபல்யம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன. இதுவரை 17 படங்களில் நடித்திருப்பதாக கூறுகிறார் வனிதா.

அந்தகன்: பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே அவரது மகள் ஜோவிகாவும் திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக உழைத்துவருகிறார்.
வனிதாவின் பேச்சு: வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். ஒரு பேட்டியின்போது லட்சுமி ராமகிருஷ்ணனை வறுத்தெடுத்துவிட்டார். அதேபோல் தனது சகோதரர் அருண் விஜய் குறித்து தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேட்டிகளில் பேசிவருகிறார். அதேசமயம் அவர் அப்படி பேசுவதுதான் அவரை அவரது குடும்பத்தினர் தள்ளி வைத்ததற்கான காரணம் என்றும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது குறிப்பிடஹ்த்டக்கது.
வனிதாவின் திருமணம்: இது ஒருபக்கம் இருக்க; வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு ராபர்ட் கைகளை பிடித்திருந்த வனிதாவின் ஒரு புகைப்படம் ட்ரெண்டானது.
திருமண அழைப்பிதழ் வடிவில் அந்தப் புகைப்படம் இருந்ததால் இருவருக்கும் ஐந்தாம் தேதி திருமணமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இருவரும் சேர்ந்து இந்தியா க்ளிட்ஸ் யூட்யூப் சேனலில் உரையாடியபோது ராபர்ட், 'சின்ன வயசுல ப்ரெண்ட்ஸோடு சுத்துறதுல என்ன இருக்கு அப்டியான மனநிலையில் இருந்த நான் இப்போதுதான் அப்பா, அம்மா பேச்சை கேட்டு ஒழுங்காக இருக்கிறது. வாழ்க்கையை ரீஸ்டார்ட் செய்திருக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார்.
வனிதா பதிலடி: அதற்கு பதிலளித்த வனிதா, "உன்னை எனக்கு எமோஷனலியாகவே தெரியும் ராபர்ட். நீ வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் என்னவென்றும் எனக்கு தெரியும். ஒன்று சொல்கிறேன், வயதானவர்களோ, நடுத்தர வயதினரோ, இள வயதினரோ கிண்டல் அடிப்பவர்கள் அடித்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் தற்கொலைதான் செய்துகொள்வார்கள்" என்றார். இந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











