இதுக்கு பேரு கன்டென்ட்டா.. இதான் உங்களுக்கு காமெடியா.. காமெடி நிகழ்ச்சியில் கடுப்பான வனிதா அக்கா!

சென்னை: நடிகை வனிதா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கோபப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏற்கன இரண்டு திருமணமாகி விவாகரத்தான அவர் மூன்று குழந்தைகளுக்கு தாயாவார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் சண்டை சச்சரவு, வத்தி வைப்பது என இருந்தார்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

இதனால் சமூக வலைதளங்களில் அவரை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் டைட்டில் வின்னரான வனிதா யூடியூப் சேனலை தொடங்கினார்.

பீட்டர் பால் திருமணம்

பீட்டர் பால் திருமணம்

அப்போது தனது யூடியூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலுடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார் வனிதா.

பீட்டரை பிரிந்த வனிதா

பீட்டரை பிரிந்த வனிதா

அவருடன் லிப்லாக், அப்படி இப்படி என போட்டோக்களை வெளியிட்டு வந்த வனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை பிரிந்தார். பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் அவரை பிரிந்ததாக வீடியோ வெளியிட்டார்.

கலக்கப்போவது யார்

அந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் வனிதாவின் மேலும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் வனிதா.

வனிதாவுக்காக பாலா பதில்

வனிதாவுக்காக பாலா பதில்

அதில் ஈரோடு மகேஷ் கேள்விகளை கேட்க, வனிதா கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு பின்னால் நின்றபடிய விஜய் டிவி பாலா, வனிதாவை கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்கிறார்.

கமிஷனர் ஆபிஸ்தான்

கமிஷனர் ஆபிஸ்தான்

அதாவது, நீங்கள் அடிக்கடி போகும் ஃபேவரைட் இடம் எது என வனிதாவிடம் மகேஷ் கேட்க, கமிஷனர் ஆபிஸ்தான் என்கிறார். அடுத்து நீங்க யாரதான் ஃபாலோ பண்றீங்க என்று கேட்க, பெண்டிங் கேஸையெல்லாம் முடிக்க வக்கீல ஃபாலோ பண்றாங்க என்கிறார்.

லிமிட்டு இருக்கு

லிமிட்டு இருக்கு

வாலு படத்துல பணக்காரி ரோல் கொடுத்தா நடிப்பீங்களா என கேட்கிறார் அதற்கு பாலா, மிஷ்கின் படத்தில் மீன்காரி வேஷம் கொடுத்தாலும் நடிப்பாங்க என்கிறார். இதனைக் கேட்டு கடுப்பான வனிதா, எல்லாத்துக்குமே லிமிட்டுன்னு ஒன்னு இருக்கு புரியுதா என ஆவேசமாகிறார்.

ஆவேசமான வனிதா

ஆவேசமான வனிதா

தொடர்ந்து பேசும் வனிதா, உங்களுக்கு வேற கன்டென்ட் கிடைக்கலையா? இதுதான் உன் பேர்ல காமெடியா? நான் கேட்கிறேன் என படு ஆக்ரோஷமாக பேசுகிறார். அவர் கத்தி பேசுவதை பார்த்து மொத்த செட்டும் அமைதியாகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X