என் கேரக்டர தப்பா பேசாதீங்க.. நான் 3 குழந்தைங்களுக்கு தாய்.. பிரஸ் மீட்டில் கதறி அழுத நடிகை வனிதா!

சென்னை: இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயக்குமார் 3 குழந்தைகளுக்கு தாயான தன்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசுவதாக கூறி கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வனிதா விஜயக்குமார் பீட்டர் பால் என்பவரை கடந்த 27 ஆம் தேதி தன்னுடைய வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார்.

விமர்சனம்

விமர்சனம்

இதனையறிந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் போலீஸில் புகார் அளித்தார். இதனால் வனிதாவின் திருமண விவகாரம் பூதாகரமானது. சமூக வலைதளங்களில் பலரும் வனிதாவை விமர்சித்தனர். திரைத்துறை பிரபலங்கள் பலரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்தனர்.

மனிப்பு கேட்டனர்

மனிப்பு கேட்டனர்

அவர்களை எல்லாம் மூஞ்சில் அடித்தாற் போல் பேசி விளாசினார் வனிதா. இதனால் நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் டிவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டனர். அதோடு வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர் ரவீந்திரனையும் அவர் விளாசினார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில் சென்னை போரூர் காவல்நிலையத்தில் நடிகை வனிதா, தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் யூட்யூப் பிரபலம் சூர்யா தேவி குறித்து புகார் அளித்தார். இதனை ஏற்கனவே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புகார் அளித்த கையோடு நடிகை வனிதா செய்தியாளர்களை சந்தித்தார்.

சூர்யா தேவி

சூர்யா தேவி

அப்போது அவர் பேசியதாவது, எல்லோருக்கும் வணக்கம், கடந்த சில வாரங்களா மீடியாக்களில் பரபரப்பா போறது என் விஷயம்தான். யார் வேணும்னாலும் யூட்யூப் சேனல் நடத்தலாம்ங்ற தைரியத்துல யூட்யூப் சேனல் தொடங்கியிருக்க சூர்யா தேவி என்பவர் என்னை பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார்.

கேவலமான வார்த்தைகள்

கேவலமான வார்த்தைகள்

என்னை தப்பு தப்பா பேசி வீடியோ போட்டு வருகிறார். பேர் வாங்கனும் பணம் சம்பாதிக்கனும், என்னைப்பற்றி பேசினா பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக எல்லை மீறி பேசி வருகிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

என்னோட லாயர் பத்தியும் பேசியிருக்கிறார். என்னுடைய கேரக்டர் பத்தியும் ரொம்ப தப்பு தப்பா சூர்யா தேவியும், தயாரிப்பாளர் ரவீந்திரனும் பேசிக்கிட்டு வர்றாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து பேட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரவீந்திரன் ஒரு தயாரிப்பாளர், ஆனா யூட்யூப்ல மத்தவங்கள விமர்சிச்சுதான் பிரபலம் ஆகிறார்.

பப்ளிசிட்டிக்காக

பப்ளிசிட்டிக்காக

இப்போது, லாக்டவுன் என்பதால் போரடிக்கிது, வேலையில்லாம இருப்பதாலும் பப்ளிசிட்டி வேணும்ங்கறதாலும் என் பேர் பிரபலமா இருக்குங்றதாலேயும் என்னைப்பத்தி பேசி பிரபலமாக பார்க்குறாங்க. இந்த சூர்யா தேவி யார் அப்படிங்கிற உண்மையும் தெரிஞ்சுடுச்சு அதைப்பத்தியெல்லாம் என் லாயர் பேசுவார்.

ரொம்ப கஷ்டப்பட்டேன்

ரொம்ப கஷ்டப்பட்டேன்

எல்லாருக்கும் ஒரு சின்சியர் ரெக்வெஸ்ட். ஒரு சில உண்மைகள் வெளியே வர வரைக்கும் எல்லாருமே கொஞ்சம் பொருமையா இருங்க. மீடியாவும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க. நான் 3 குழந்தைகளுக்கு தாய். இத்தனை வருஷமா நான் சிங்கிள் மதரா இருந்து ரொம்ப கஷ்டப்பட்டேன்.

கதறிய வனிதா

கதறிய வனிதா

எனக்கு அப்பா அம்மான்னு ஃபேமிலி சப்போர்ட் ஏதும் இல்லை. அந்த ஒரே ஒரு விஷயத்துக்காக தேவையில்லாமா யார் யாரோ வந்து பேசுறாங்க என்று கூறி கதறினார் வனிதா. மேலும் ரவீந்திரனெல்லாம் ஒரு சினிமா தயாரிப்பாளரா இருந்துக்கிட்டு சினிமா குடும்பத்துல உள்ள பொண்ண இவ்ளோ தப்பு தப்பா கொச்சையா பெண்ண பேசுறது தேவையில்லாதது.

என் மகன் வளர்ந்துட்டான்

என் மகன் வளர்ந்துட்டான்

உங்களுக்கு கன்டென்ட் கிடைக்குது அப்படிங்றதுக்காக மீடியா இதையெல்லாம் போடாதீங்க. சூர்யா தேவியும் ரவீந்திரனும் கைக்கோர்த்து வேலை பார்க்குறாங்க.
3 குழந்தைகள் இருக்காங்க.. என் மகன் நல்லா வளர்ந்துட்டான். அவன் டிப்ரஷன்ல இருக்கான்ங்ற நியூஸ்லாம் போடாதீங்க.

நாங்க பேசுறோம்

நாங்க பேசுறோம்

என் குழந்தைங்கள எவ்ளோ ஸ்ட்ராங்க வளர்க்கனுமோ அவ்ளோ ஸ்ட்ராங்கா வளத்திருக்கேன். என் மகனும் ஸ்ட்ராங்கா இருக்கான், அவங்க அப்பா அவன நல்லபடியா பார்த்துக்கிட்டு இருக்காரு. அவங்க அப்பாவும் நானும் இன்னும் டச்லதான் இருக்கோம். பெற்றோரா நாங்க பேசிக்கிட்டுதான் இருக்கோம்.

எனக்கு துணை வேணும்

எனக்கு துணை வேணும்

எனக்கு இந்த வருஷம் 40 வயசு ஆகப்போகுது. எனக்கு வாழ்க்கையில ஒரு துணை வேணும்னு முடிவு எடுத்து நேர்மையா ஒரு விஷயம் பண்ணியிருக்கேன். யாரையும் ஏமாத்தல. மத்தவங்க மாதிரி ஏமாத்திக்கிட்டு தப்பு பண்ணல. அதுல ஒரு சின்ன சிக்கல். அதை என் லாயர் கவனிச்சுட்டு இருக்காங்க.

நான் ரொம்ப டிப்ரஷன்ல

நான் ரொம்ப டிப்ரஷன்ல

அதுக்காக என் கேரக்டர தப்பா பேசி, என்னைப் பத்தி கீழ்த்தரமா பேசுறதால நான் ரொம்ப டிப்ரஷனுக்கு ஆளாகிறேன். 2 பெண் குழந்தைகள் இருக்காங்க. வெளியே போறதுக்கு கூட பயமா இருக்கு. ஒன்னே ஒன்னுதான் நான் சொல்றன், யாரும் என் கேரக்டரை பத்தி தப்பா பேசாதீங்க.

வனிதா கண்ணீர்

வனிதா கண்ணீர்

சினிமாகாரங்க உங்களுக்கு தேவையில்லாத விஷயத்துல உள்ள வராதீங்க. நாங்க சினிமாவுல கூட இருக்க முடியாது. நான் 3 குழந்தைங்களுக்கு தாய். என் 2 பெண் குழந்தைகளுக்கும் நான்தான் தாய். யார் அவங்கள பார்த்துப்பாங்க. தயவு செஞ்சு என்னைப் பத்தி தப்பா பேசாதீங்க.. என்று கூறி கண்ணீருடன் முடித்தார் நடிகை வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X