பிக்பாஸ் 8.. அவரைப் பார்த்தால் ஒரு மாதிரி ஆகுது.. எல்லாமே இளம்பெண்கள்.. வனிதா ஓபன் டாக்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தொடங்கி நடந்துவருகிறது. 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களில் சாச்சனா முதல் நாளே எவிக்ட் செய்யப்பட்டார். இதனால் ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். பல ரூல்ஸ்கள் மாறியிருப்பதால் இந்த சீசன் கண்டிப்பாக களைகட்டும் என்று ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். விஜய் சேதுபதியும் தனது பங்குக்கு சுவாரசியத்தை கூட்டுகிறார். சூழல் இப்படி இருக்க வனிதாவின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அவரது எதார்த்த பேச்சும், உடல்மொழியும் கண்டிப்பாக நிகழ்ச்சி சிறப்பாக நடக்க உதவும் என்று ரசிகர்கள் கணித்திருந்தனர். அவர்களின் கணிப்புப்படியே நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பலரையும் வைத்து செய்துவிட்டார். முக்கியமாக அர்னவ்விடம் கோபத்தில் என்ன ஆம்பள, பொம்பள என்று கேட்டது, ரஞ்சித்தின் நண்பரிடம் பேசியது, அருணிடம் நான் பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று கூறியது என ஃபுல் பார்மில் இருக்கிறார் அவர்.

சாச்சனா எவிக்ட்: நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு நாளிலேயே சாச்சனா எவிக்ட் செய்யப்பட்டார். அது ஹவுஸ் மேட்ஸ் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கிறது.மேலும் இந்த சீசனில் என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாகியிருப்பதால் கவனத்தோடு விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என இரண்டாகவும் வீடு பிரிக்கப்பட்டிருக்கிறது.
அணி மாறிய முத்து, பவி: நேற்றுக்கூட ஆண்கள் சார்பாக விளையாட பெண்கள் வீட்டுக்குள் முத்துவும், பெண்கள் சார்பாக விளையாட ஆண்கள் வீட்டுக்குள் பவித்ரா ஜனனியும் சென்றனர். அந்த விஷயத்தில் ஜாக்குலினுக்கும், சுனிதாவுக்கும், பவித்ராவுக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆக நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே பஞ்சாயத்து ஆரம்பித்திருப்பதால் நாட்கள் செல்ல செல்ல வீட்டில் ரகளை நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
வனிதா வீடியோ: இந்நிலையில் எப்போதும் பிக்பாஸ் பற்றி விமர்சன வீடியோ போடும் வனிதா இப்போதும் ஒரு வீடியோவை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "பிக்பாஸ் சீசன் எட்டில் சத்யா அணியக்கூடிய உடைகளில் எனக்கு விருப்பமில்லை. பெண்கள் குட்டையான உடை அணிந்தால் உடனே தவறான எண்ணம் தோன்றுகிறது என்று கூறுகிறார்கள். அதேபோல் ஆண்களும் கவர்ச்சியான உடையை அணிந்தால் பெண்களுக்கும் அது தோன்றும்தானே. பெண்கள் மோசமான உடை அணியக்கூடாது என்று எப்படி சொல்கிறார்களோ அதேபோல் ஆண்களும் கவர்ச்சியான உடைகள் அணியக்கூடாது என்று சொல்ல வேண்டும்.
ஒரு மாதிரி ஆகிறது: சத்யா அணியக்கூடிய உடைகளை பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருக்கிறது. பார்ப்பதற்கே ரொம்ப மோசமாக இருக்கிறது. தான் ஒரு ஆணழகன் என்பதை காட்டுவதற்காக வேண்டுமென்றே இப்படியான உடைகளை அணிந்துகொண்டு இளம்பெண்கள் இருக்கும் இடத்தில் அவர் சுற்றிக்கொண்டிருப்பதெல்லாம் பார்ப்பதற்கு சுத்தமாக சரியில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











