அம்மாவின் மூன்றாவது கல்யாணத்துக்கு வாழ்த்து சொன்ன மகள்.. வைரலாகும் வனிதா மகளின் இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை: வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு அவரது மகள் ஜோவிகா உருக்கமாக வாழ்த்து கூறியுள்ள இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.
பல படங்களில் நடித்துள்ளார் வனிதா. சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
அவர் நடித்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவுக்கு போவில்லை. இதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை வனிதா.

இரண்டு பிள்ளைகள்
நடிகை வனிதா, தனது 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் கணவர் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் வனிதா.

ஒரு மகள்
பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ராஜன் என்பவரை அதே ஆண்டிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஜெயந்திகா என்ற மகளை பெற்றுக்கொண்ட வனிதா 2010ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

காதல் உறவு
தொடர்ந்து டான்ஸ் மாஸ்டரான ராபர்ட்டை காதலித்தார். வனிதாவின் பெயரை எல்லாம் பச்சைக் குத்திக்கொண்டார் ராபர்ட். இருவரும் சேர்ந்து படம் ஒன்றை தயாரித்தனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான காதலையும் முறித்துக் கொண்டார் வனிதா.

பிக்பாஸ் சீசன் 3
நடிகை வனிதா, படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதிலும் நடிக்காமல் இருந்தாலும் அடிக்கடி குடும்பத்தகராறில் செய்திகளில் அடிபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் மேலும் பிரபலமானார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் நடிகை வனிதா வரும் 27 ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். பீட்டர் பால் என்ற விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை திருமணம் செய்ய உள்ளார். அவரது திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமணம் உண்மைதான் என அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டார் வனிதா.

மகள் இன்ஸ்டா பதிவு
அவரது அறிக்கையும் திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் அவரது மகள் ஜோவிகா, தனது தாயின் மூன்றாவது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஐ லவ் யூ
அதில் '' நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு சப்போர்ட்டாக இருப்பேன். நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களுடன் இருக்கும் 15 ஆண்டுகளும் தீரம்மிக்கது. வாழ்க்கையில் பலவற்றை சேர்ந்து பார்த்திருக்கிறோம்.

எந்த தவறும் இல்லை.
இன்னும் பல ஆண்டுகள் போன்றுதான் வர போகிறது என்பது எனக்கு தெரியும். உங்களை எனக்கு தெரிந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியாது. நீங்கள் அன்பான மனிதர். நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ வேண்டும், அதில் எந்த தவறும் இல்லை.

மறந்துவிடாதீர்கள்
ஐ லவ் யூ, நான் 10000% உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை, யார் என்ன பேசினாலும் பரவாயில்லை, ஏனெனில் எனக்கு உங்களைப்பற்றி தெரியும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி, நேர்மையானவர், அருமையானவர், உற்சாகப்படுத்தக்கூடியவர், இரக்கமானவர், அன்பானவர்.. அதை மறந்துவிடாதீர்கள்.

பலன் கிடைத்துள்ளது
அனைவரையும் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ தகுதியுள்ளவர். எல்லோருக்கும் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் மேஜிக்கில் நம்பிக்கை இருப்பதில்லை. எல்லோருக்கும் காதலிலும் நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் உங்களுக்கு இருந்தது, அதற்கான பலன் கிடைத்துள்ளது.

ஆல் த பெஸ்ட் மா
இதை உங்களின் மகளாகவும் தோழியாகவும் சொல்கிறேன். ஐ லவ் யூ... ஆல் த பெஸ்ட் மா.. இவ்வாறு வனிதாவின் மகளான ஜோவிகா தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, நான் என்னுடைய ஆசிர்வாதங்களை எண்ணுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











