ஆகககா.. கேஎப்சி கிரிஸ்பி சிக்கனை வனிதா ஊட்ட.. பீட்டர் பால் வாங்கிச் சாப்பிட.. அள்ளுதே!

சென்னை: திருமண சர்ச்சையில் சிக்கியிருக்கும் நடிகை வனிதா தனது மூன்றாவது கணவருக்கு கேஎஃப்சி கிரிஸ்பி சிக்கன் செய்து ஊட்டிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

Vanitha சாயம் வெளுத்தது • கொந்தளிக்கும் ரசிகர்கள் • Vanitha Peter paul

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம்தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்தான வனிதா தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

ஆனால் பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துக் கொண்டார். இதனால் வனிதாவுக்கும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

டீடோட்லர் இல்லை

டீடோட்லர் இல்லை

பலரும் வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். வனிதா பீட்டர் பாலை டீடோட்லர் என்று கூறிய நிலையில், பீட்டர் பாலின் மகன், என் அப்பா டீடோட்லரெல்லாம் இல்லை. அவர் ஒரு குடிகாரர் இதற்காக மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

கேஎஃப்சி கிரிஸ்பி சிக்கன்

இப்படி பீட்டர் பால் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இந்த பிரச்சனையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை வனிதா தனது யூட்யூப் சேனலில் லைவில் கேஎஃப்சி கிரிஸ்பி சிக்கன் செய்து காண்பித்தார். மகள் ஜோவிகாவுடன் இணைந்து வனிதா அந்த டிஷ்ஷை செய்து காண்பித்தார்.

வாங்க.. டேஸ்ட் பண்ணுங்க..

வாங்க.. டேஸ்ட் பண்ணுங்க..

இதனை கேமரா மேனாக இருந்து டெலிகாஸ்ட் செய்தார் பீட்டர் பால். இறுதியாக கேஎஃப்சி கிரிஸ்பி சிக்கன் செய்த நடிகை வனிதா, அதனை தனது மகளுக்கு முதலில் ஊட்டிவிட்டார். பின்னர் கேமராவுக்கு பின் நின்ற தனது கணவரை நீங்களும் வாங்க, வந்து டேஸ்ட் பண்ணுங்க என்று அழைத்தார் வனிதா.

ஊட்டிவிட்ட வனிதா

ஊட்டிவிட்ட வனிதா

இதனை தொடர்ந்து கேமராவுக்கு முன்பு வந்த தனது கணவர் பீட்டர் பாலுக்கு தான் செய்த கேஎஃப்சி கிரிஸ்பி சிக்கனை ஊட்டிவிட்டார் வனிதா. வனிதாவின் யூட்யூப் சேனலில் உள்ள இந்த வீடியோவை அடுத்த சில மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

கழுவி ஊற்றி கமெண்ட்

கழுவி ஊற்றி கமெண்ட்

இதுவரை அந்த வீடியோவை சுமார் 15 லட்சம் பேர் வரை பார்த்து ரசித்துள்ளனர். 26 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 14 ஆயிரம் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான கமெண்டுகள் வனிதாவையும் அவரது கணவரையும் கழுவி ஊற்றியே உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X