வனிதாவின் அடுத்த ஃபைட் 2வது கணவருடன்- மகளுக்காக ரகளை!

By Shankar

Vanitha with Anand Rajan
நடிகை வனிதா விஜயகுமார் இப்போது தனது அடுத்த சண்டையை ஆரம்பித்துள்ளார். இந்த முறை இரண்டாவது கணவர் ஆனந்த ராஜனுடன்!

வனிதாவுக்கும் நடிகர் ஆகாஷூக்கும் முதலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

பின்னர் ஆகாஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து, விவாகரத்து பெற்றனர். ஆனந்தராஜ் என்பவரை வனிதா இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜெய் நிதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

வனிதாவுக்கும் முதல் கணவர் ஆகாஷூக்கும் பிறந்த குழந்தை ஸ்ரீஹரியை யார் வைத்துக் கொள்வது என்பதில் தகராறு ஏற்பட்டது. இருவரும் நீதிமன்றம் சென்றனர். தாயாருடன்தான் அந்த சிறுவன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், தந்தையுடன்தான் இருப்பேன் என்று அந்தப் பையன் அடம் பிடித்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

மகனுக்காக ஆனந்தராஜை பிரிந்தார். மீண்டும் முதல் கணவர் ஆகாஷூடனேயே சேர்ந்து விட்டார் வனிதா. இருவரும் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். ஆனந்தராஜுக்குப் பிறந்த ஜெய் நிதாவையும் தன்னுடனே வைத்திருந்தார் வனிதா.

இதற்கிடையில் ஆனந்தராஜ் நேற்று நள்ளிரவு வனிதா வீட்டில் புகுந்து தனது மகள் ஜெய் நிதாவை அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாமல் வனிதா திடுக்கிட்டார். பிறகு ஆனந்தராஜ் வீட்டில் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

உடனேயே அவர் வீட்டுக்கு சென்று மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் ஆனந்தராஜ் கொடுக்க மறுத்தார். மகளை கவனிக்காமல் ஒதுக்குவதாக வனிதா மேல் அவர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் வனிதா அங்கிருந்து போகாமல் ஆனந்தராஜ் வீட்டுக் கதவை தட்டி நீண்ட நேரம் ரகளை செய்ததாக கூறப்படுறது. அக்கம் பக்கத்தினர் திரண்டு தகராறை வேடிக்கை பார்த்தார்கள்.

அடுத்து ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுக்கத் தயாராகி வருகிறார்கள். நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X