வனிதாவிடம் குழந்தையை ஒப்படைத்தார் ஆனந்த்ராஜ்!

By Shankar

Anandaraj and Vanitha
சென்னை: நடிகை வனிதாவிடம், நேற்று பெண் குழந்தை ஜெனிதாவை ஒப்படைத்துவிட்டார் ஆனந்தராஜ்.

முன்பு தனது ஆண் குழந்தைக்காக முதல் கணவர் ஆகாஷுடன் போராடிய நடிகை வனிதா, இப்போது பெண் குழந்தைக்காக 2-வது கணவருடன் மோதினார்.

நடிகை வனிதா தனது முதல் கணவரான நடிகர் ஆகாஷை எதிர்த்து ஏற்கனவே கடும் போராட்டம் நடத்தினார். ஆகாஷ் மூலம் பிறந்த தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு அவர் போலீஸ் நிலையங்களிலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகாருக்கு மேல் புகார் கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் போட்டார். இந்த போராட்டத்தில் தனது தந்தை நடிகர் விஜயகுமாரையே கடுமையாக தாக்கினார்.

ஒரு வழியாக வனிதாவின் இந்த போராட்டத்தை முடிவுக்கு வந்தது. முதல் கணவர் நடிகர் ஆகாஷோடு சமாதானமாக போய், தன் மகனுடன் சேர்ந்தார்.

2-வது கணவருடன் மோதல்

நடிகர் ஆகாஷோடு வனிதா நடத்திய போராட்டத்தில் அவருக்கு, 2-வது கணவர் ஆனந்தராஜ்தான் உறுதுணையாக இருந்தார். ஆனால் மகனுக்காக ஆனந்த்ராஜை பிரிந்தார் வனிதா. இப்போது ஆனந்தராஜுடன் வனிதா மோதலில் ஈடுபட்டார்.

ஆனந்தராஜ் மீது நேற்று காலை வனிதா சென்னை சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

ஏன் இந்த போராட்டம்?

வனிதா தனது 2-வது கணவருக்கு எதிரான் தனது மோதல் குறித்து குறித்து வனிதா கூறுகையில், "என்னுடைய 3 குழந்தைகள் மீதும் எனக்கு பாசம் அதிகம். 3 குழந்தைகளையும் என்னால் பிரிந்திருக்க முடியாது. அதனால்தான் எனக்கு இந்த பிரச்சினை. எனது 2-வது கணவரை பிரிந்து நான் இப்போது, சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோட்டில் தனியாக வாழ்கிறேன்.

2-வது கணவரும், நானும் சட்டப்படியாக பிரிவது என்று ஒருமனதாக முடிவு எடுத்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனு விசாரணையில் உள்ளது.

ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் ரூ.15 லட்சம் பணம் வேண்டும் என்றும், நான் வைத்திருக்கும் நகைகளையும் தர வேண்டும் என்றும், 2-வது கணவர் ஆனந்தராஜ் திடீரென்று மிரட்ட ஆரம்பித்துவிட்டார். அதன் விளைவாகத்தான் எனது 3-வது பெண் குழந்தை ஜெனிதாவை, ஆனந்தராஜ் பறித்துச் சென்று விட்டார்.

நான் அவரை மிரட்டுவதாக என்மீது தேனாம்பேட்டை போலீசில் பொய் புகார் கொடுத்தார். அதற்காக தேனாம்பேட்டை போலீசார் என்னை அழைத்து விசாரித்தார்கள்.

என்னிடம் பணம் பறிப்பதற்காக எனது குழந்தையை பணயம் வைத்து ஆனந்தராஜ் மிரட்ட ஆரம்பித்துள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்காமல் நான் ஓயமாட்டேன்," என்றார்.

மறுத்தார் ஆனந்தராஜ்

ஆனால் வனிதாவின் இந்த குற்றச்சாட்டுகளை ஆனந்தராஜ் மறுத்தார். "வனிதா எனக்கு பிறந்த குழந்தை ஜெனிதா மீது பாசம் காட்டுவதில்லை. குழந்தையை சரியாக வளர்க்காமல் வனிதா துன்புறுத்துவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனால் குழுந்தையை அழைத்து வந்தேன். என் குழந்தையை நான் அழைத்துவர யாரிடமும் அனுமதி கேட்கத் தேவை இல்லை. வனிதா கொடுத்துள்ள புகாரை நான் சட்டப்படி சந்திப்பேன்," என்று தெரிவித்தார்.

குழந்தையை ஒப்படைப்பு

ஆனால் இந்த மோதல் ஒரே நாளில் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று இரவு போலீசார் முன்னிலையில் குழந்தையை வனிதாவிடம் ஒப்படைத்துவிட்டார் ஆனந்தராஜ்.

ஆண்குழந்தை ஹரிக்காக பெரிய போராட்டம் நடத்திய வனிதாவுக்கு, பெண்குழந்தைக்காக அப்படியொரு போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லாமல் குழந்தையைக் கொடுத்துவிட்டார் ஆனந்த்ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X