மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் வனிதா.. முக்கிய கேரக்டரில் அந்த நடிகராம்.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயக்குமார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் சதா வாக்குவாதத்தில் ஈடுபட்டு கன்டென்ட் கிவ்வர் ஆனார்.

ஹாட்டான டாப்பிக்
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். அதனை தொடர்ந்து சமையல் நிகழ்ச்சிகளுக்கான யூட்யூப் சேனலை தொடங்கிய வனிதா அதிலும் ஹாட்டான டாப்பிக்குகளை பேசி கல்லாக்கட்டினார்.

ஏற்கனவே திருமணம்
இந்நிலையில் தான் தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்தார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்ததால் அவருடைய மனைவி தனது கணவரை வனிதா அபகரித்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்தார்.

காதல் கணவருடன் கோவா
இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பேசு பொருளானது. ஆனால் அதையெல்லாம் சட்டைசெய்யாத வனிதா பீட்டர் பாலை விட்டு தர முடியாது என விடாப்பிடியாக இருந்தார். காதல் கணவருடன் கோவா சென்றார் வனிதா.

கண்ணீர் மல்க வீடியோ
அப்போது பீட்டர் பால் குடித்து விட்டு ரகளை செய்ததால் வீட்டை விட்டு விரட்டினார். இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியானதால் தான் பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.

சரக்குடன் மட்ட மல்லாக்க
ஆனால் அடுத்த சில நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டார் வனிதா. வட இந்தியாவில் இருந்து போட்டோக்களை ஷேர் செய்த வனிதா, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். மாலத்தீவில் கையில் சரக்குடன் அவர் மட்ட மல்லாக்க படுத்திருந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்தது.

வனிதாதான் ஹீரோயின்
இந்நிலையில் நடிகை வனிதா விஜயக்குமார் மீண்டும் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாம்பு சட்டை படம் இயக்கிய ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கருணாகரன் முக்கிய கேரக்டர்
இந்த படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படம் என்பதால் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய இந்த படத்தில் நடிக்க வனிதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











