ஏம்மா வனிதா நீ கேப்டனா? இல்ல கேங்ஸ்டரா?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 5: Promo 1: தான் செய்த வேலைகள் கேமெராவுக்கு மட்டும் தான் தெரியுமாம்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டின் கேப்டனான வனிதா கேங்ஸ்டர் போல் நடந்து கொள்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா கேப்டன் பதவி கொடுத்த நாள் முதல் ஓவராக பேசி வருகிறார்.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. பல படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே குடும்பப்பிரச்சனை காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபட்டு மக்களிடையே பிரபலமாகியுள்ளார்.

சண்டைகளுக்கு கேரண்டி

சண்டைகளுக்கு கேரண்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே சண்டைகளுக்கு கேரண்டி என டிவிட்டுகள் பறந்தன.

நைட்டியுடன் விரட்டிய வனிதா

நைட்டியுடன் விரட்டிய வனிதா

அந்தளவுக்கு கணவருடன் தகராறு விவாகரத்து, தந்தையுடன் சண்டை, குடும்பத்தினருடன் சண்டை என அசராமல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வனிதா வீட்டு சண்டையை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களை, நடுத்தெருவில் நைட்டியுடன் வனிதா ஓட ஓட விரட்டியது அவரது சண்டை வரலாற்றின் உச்சம்.

விடுவேனா தீர்ப்பேனா?

விடுவேனா தீர்ப்பேனா?

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் அமைதியாக இருந்த வனிதா கேப்டன் பதவி கொடுத்தப்பின் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டார். குறிப்பாக மீரா வந்த பிறகு அவரை விடுவேனா தீர்ப்பேனா என்ற ரேஞ்சுக்கு டெரராக மாறிவிட்டார்.

சாக்கடையில் கல் எறிந்தால்

சாக்கடையில் கல் எறிந்தால்

அபிராமியே அமைதியாக இருந்தபோதும் அதைக் காரணமாக காட்டி மீராவிடம் சண்டைபோட்டார் வனிதா. மீராவை சாக்கடை என்று கூறிய வனிதா, சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீதுதான் தெறிக்கும் என்ற பழமொழியை கூறினார்.

அப்பாவையும் வெளுத்த வனிதா

அப்பாவையும் வெளுத்த வனிதா

அதோடு நிறுத்தினாரா? இல்லை இந்த பழமொழியை என் அப்பன்தான் சொன்னான் என்று கிடைத்த கேப்பில் விஜயகுமாரையும் வெளுத்தார். பல கோடி பேர் பார்க்கும் டிவி ஷோவில் அப்பா என்றுக்கூட பார்க்காமல் அவன் இவன் என்று பேசியதில் இருந்தே அவரது லட்சனம் தெரிந்துவிட்டது.

கேப்டன் அல்ல கேங்ஸ்டர்

கேப்டன் அல்ல கேங்ஸ்டர்

இந்நிலையில் கேப்டன் போல் இல்லாமல் வனிதா கேங்ஸ்டர் போல் குரூப் சேர்த்துக்கொண்டு மீராவை கதறவிட்டு வருகிறார். ஏற்கனவே சண்டைக்கு பெயர் போன வனிதா தற்போது பிக்பாஸ் வீட்டில் பாஸ் என்ற கெத்துடன் ஆட்டம்போட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X