குழந்தைங்க.. பிரக்னென்ட் லேடிஸ்.. இதயம் பலவீனமானவுங்க.. தயவு செய்து பிக்பாஸ் பாக்காதீங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சண்டைகளை பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு நெஞ்சுவலியே வந்துவிடும் போல் உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சண்டை காட்சிகள் அதிகரித்து வருகின்றன. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக இருப்பவர் வனிதா தான்.
பிக்பாஸ் வீட்டின் பிராப்ளம் கிரியேட்டரே இந்த வனிதாதான். ஒவ்வொருவரிடமும் சென்று அடுத்தவர்களை பற்றி பேசுவதையே பிக்பாஸ் வீட்டில் தொழிலாக வைத்துள்ளார் வனிதா.

ஆண்டவனுக்கே அடுக்காது
அதுவும் மதுமிதாவை வனிதா படுத்தும்பாடு அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. பாவம் மதுமிதா.. தன்பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவரை வலுக்கட்டாயமாக இழுத்து சண்டை போடுகிறது வனிதா கேங்க்.

நாராசமாக பேசும் ஷெரின்
ஷெரின் எப்படி பேசுகிறார். தமிழ் தெள்ள தெளிவாக பேச தெரிந்தவர்கள் கூட இப்படி பேச மாட்டார்கள். அந்தளவுக்கு நாராசமாக பேசுகிறார் ஷெரின்.

குதிச்சு வெளியே போ
அன்றும் மதுமிதாவை வீட்டை விட்டு வெளியே போ என்று கூறினார் ஷெரின். இன்றும் ஏறி குதி, குதிச்சு வெளியே போ என கத்தினார் ஷெரின். சாவித்திரி மாஸ்க் போட்டுக்கொண்டு எல்லோரையும் இவள் ஏமாற்றுகிறாள் என்றும் ஷெரின் இழிவாக பேசினார்.

ஒரு வழியாக்கிவிட்டனர்
சாக்ஷியும் மீராவுடன் மதுமிதா பேசிவதை பிரச்சனையாக்கி படு கேவலமான பாடி லாங்குவெஜை வெளிப்படுத்தினார்.சாக்ஷி, அபிராமி, ஷெரின், வனிதா என நான்கு பேரும் சேர்ந்துகொண்டு மதுமிதாவை ஒரு வழியாக்கிவிட்டனர்.

பிராப்ளம் கிரியேட்டர்
மதுமிதா யாரையும் யாரிடமும் பேசக்கூடாது என எப்போதும் கூறவில்லை. நேற்று மீரா கூறியதாக தொடங்கிய பிரச்சனை இன்று மதுமிதாவில் வந்து முடிந்தது. எல்லாரையும் தூண்டி விட்டு சண்டை போட வைத்தது வனிதாதான் என பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிந்தது.

நம்ம லெவலுக்கு கீழ
யாரும் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ள மாட்டார்கள். சண்டை நடக்கும் போது கை தட்டி டான்ஸ் ஆடி கொண்டாடிய வனிதா, பின்னர் இவளெல்லாம் நம்ம லெவலுக்கு கீழே எனக்கூறி நேரடியாகவே மட்டம் தட்டினார்.

சாதாரண குடும்பத்து பெண்
மதுமிதா ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று திரைத்துறையில் பெயர் சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அவரால் ஷெரின், வனிதா, அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா அளவுக்கு ஆங்கிலம் பேச முடியவில்லை. இதையும் ஒரு முறை மறைமுகமாக வெளிப்படுத்தினார் வனிதா.

நெஞ்சுவலி வந்துடும் போல
இந்நிலையில் மதுமிதாவை நேற்று நேரடியாகவே எல்லா வகையிலும் தாக்கிப் பேசினர் வனிதா மற்றும் அவரது கேங்க். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டையை பார்த்ததும் பலருக்கும் கை கால் உதறல் எடுத்துவிட்டது. நம் வீட்டிற்குள்ளேயே சண்டை நடந்து ஓய்ந்தது போல் இருந்தது. இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்கு முன்பு தயவு செய்து குழந்தைங்க, பிரக்னென்ட் லேடிஸ், இதயம் பலவீனமானவுங்க, பாக்காதீங்கன்னு காஷன் கார்டு போடுங்கய்யா.. நெஞ்சுவலி வந்துடும் போல இருக்கு!!


Click it and Unblock the Notifications











