வனிதாவின் 3வது திருமணம்.. ரொம்ப அசிங்கமான கமெண்ட்.. ஒரு நடிகர் இப்படி பேசலாமா?

சென்னை: வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து நடிகர் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகை வனிதா விஜயக்குமாரின் மூன்றாவது திருமணம் தான் கடந்த சில வாரங்களாக கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

ஏற்கனவே திருமணம் ஆன பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை கடந்த மாதம் காதல் திருமணம் செய்தார் வனிதா.

ஏற்கனவே 2 திருமணம்

ஏற்கனவே 2 திருமணம்

இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவரை தன்னிடம் மீட்டுத்தருமாறு கூறி போலீஸில் புகார் அளித்தார். இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையானது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆனவர் வனிதா.

பீட்டர் பாலுடன் திருமணம்

பீட்டர் பாலுடன் திருமணம்

பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் காதல் உறவில் இருந்தார். பின்னர் அவருடனான காதலை முறித்துக் கொண்ட வனிதா, தற்போது ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகாமல் இருக்கும் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.

அந்தரங்க போட்டோக்கள்

அந்தரங்க போட்டோக்கள்

அதோடு படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அதோடு லைவில் அடிக்கடி லிப்லாக் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் வனிதா. இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வனிதாவை தனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்றார்.

அதில் தவறில்லை

அதில் தவறில்லை

தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், விஜயக்குமார் குடும்பத்தில் வனிதா இல்லாததால் அவர்கள் இதுகுறித்து பேசாமல் இருப்பதாக கூறினார். ஊரே ஒரு மாதிரி பேசிக்கொண்டிருக்கும்போது நாம் ஏன் பேச வேண்டும் என மவுனம் காக்கலாம், அதில் தவறில்லை என்றார்.

தங்கமான பையன்

தங்கமான பையன்

எதற்கும் துணிந்தவன் என்பதை போல வனிதாவை எதற்கும் துணிந்தவள் என்று கூறலாம். ஆகாஷ் - வனிதா திருமணத்திற்கு கூட சென்றிருக்கிறேன். ஆகாஷ் ரொம்பவே தங்கமான பையன். என்னுடன் இரண்டு மூன்று டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

சினிமாவை விட்டே போய்விட்டார்

சினிமாவை விட்டே போய்விட்டார்

அவரது சகலை ஹரி இயக்கிய படத்தில் நடித்தார். இந்த பிரச்சனையால் ஆகாஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி சினிமாவை விட்டே ஒதுங்கி விட்டார். பாடி டிமாண்டுன்னு ஒன்னு இருக்கு, அது வனிதா விஜயக்குமாருக்கு கூடுதலாக இருக்கலாம். வனிதாவை பொறுத்தவரை முதல் கணவர் போன பிறகு, படம் தயாரிக்க வேண்டும் என்பதற்காக ராபர்ட்டுடன் உறவு வைத்திருந்தார். அவருடனான உறவு முறிந்த பிறகு, தெலுங்குகாரருடன் சென்றார்.

தேவைப்படும் போது..

தேவைப்படும் போது..

இப்போது எனக்கு யாரும் இல்லை. யூ டியூப் சேனல் தொடங்க எனக்கு பீட்டர் பால்தான் உதவினார் என்று கூறுகிறார். தனக்கு தேவைப்படும் போது யாரை வேண்டுமானாலும் நண்பராக வைத்துக்கொள்ளலாம், ஆனால் வனிதா அடுத்தக்கட்டத்துக்கு போய் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செல்லாது

திருமணம் செல்லாது

இப்போது எனக்கு யாரும் இல்லை. யூ டியூப் சேனல் தொடங்க எனக்பீட்டர் பால் விவாகரத்து வாங்கும் வரை காத்திருந்திருக்கலாம். கிறிஸ்தவ முறைப்படி ஒரு சீன்தான் கிரியேட் செய்தார்களே தவிர அந்த முறைப்படி திருமணம் செய்யவில்லை. அந்த திருமணம் செல்லாது. வனிதா செய்தது 80 சதவீதம் தவறு அவங்களை பொருத்தவரை 20 சதவீதம் சரி என தெரிவித்தார். கு பீட்டர் பால்தான் உதவினார் என்று கூறுகிறார். தனக்கு தேவைப்படும் போது யாரை வேண்டுமானாலும் நண்பராக வைத்துக்கொள்ளலாம், ஆனால் வனிதா அடுத்தக்கட்டத்துக்கு போய் திருமணம் செய்து கொண்டார்.

இப்படி பேசலாமா?

இப்படி பேசலாமா?

பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் பாடி டிமாண்ட் என்றால் என்ன என டிக்ஷனரியில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். அவரது இந்த பேட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருமணம் அவருடைய தனிப்பட்ட விஷயம் என்ற நிலையில் பாடி டிமாண்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி இப்படி பச்சையாக பேசலாமா என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Vanitha மீது குவியும் புகார், Vanitha வை கைது செய்வார்களா?
இப்படி பேசுவது தவறு

இப்படி பேசுவது தவறு

மேலும் ஒரு நடிகராக திரைத்துறையில் பிரபலமாக உள்ள ஒருவர், ஒரு பெண்ணின் ஆசைகளை கொச்சைப்படுத்தும் வகையில் இப்படி பேசுவது தவறு என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தை பற்றி பேசுவதே தவறு இதில், அவருடைய உடல், அழகு, கேரக்டர் என அனைத்தையும் இழிவு படுத்தும் வகையில் பேசுவது ரொம்பவே தவறு என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X