யார் பேரா இருக்கும்? நெஞ்சில் வனிதா வரைந்த டாட்டூ.. இந்த வயசுல இது தேவையா? விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: வனிதா வரைந்திருக்கும் புதிய டாட்டூவை பார்த்த ரசிகர்கள் யாருடைய பெயராய் இருக்கும் என மண்டை காய்ந்து வருகின்றனர்.

Recommended Video

2020ல் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் | Trending Kollywood Celebrity

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் வனிதா.

அதற்கு முன்பே குடும்பத்தாருடன் சொத்து தகராறு அப்படி இப்படி என பல பிரச்சனைகளால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வந்தார்.

வத்திக்குச்சி வனிதா

வத்திக்குச்சி வனிதா

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான், சக போட்டியாளர்களுடன் அடிக்கடி வாக்குவாதம் சண்டை என சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் வனிதா நடந்து கொண்ட விதத்தை பார்த்து அவருக்கு சண்டைக் கோழி என்றும் வத்திக்குச்சி என்றும் பெயர் வைத்தனர்.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதில் டைட்டில் வின்னரான வனிதா, சமையலுக்கான யூடியூப் சேனலை தொடங்கினார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

அப்போதுதான் தனது யூடியூப் சேனலுக்கு உதவிய விஷுவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவருடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்தது. கடந்த ஜூன் மாதம் பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா.

லிப்லாக் போட்டோ

லிப்லாக் போட்டோ

வயதுக்கு வந்த பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு வனிதா மூன்றாவது திருமணம் செய்ததும், எல்லோர் முன்பும் லிப்லாக் கொடுத்துக் கொண்டதும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. பலரும் வனிதாவை விளாசினர்.

படுக்கையறை போட்டோ

படுக்கையறை போட்டோ

இருந்த போதும் அடங்காத வனிதா, படுக்கையறை அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு வெறுப்பேற்றினார். ஒரு பக்கம் பீட்டர் பாலுடன் ரொமான்ஸ், மறுப்பக்கம் பீட்டர் பாலின் மனைவியான எலிசபெத் ஹெலனுடன் பீட்டர் தனக்குதான் என மல்லுக்கு நின்றார்.

குடி மீதுதான் விருப்பம்

குடி மீதுதான் விருப்பம்

இந்நிலையில்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வனிதா பீட்டர் பாலை பிரிந்தார். எலிசபெத் சொன்னது போல் பீட்டர் பால் ஒரு குடிக்காரர், தன் மேல் இருந்த காதலை விட குடி மீதுதான் அவருக்கு அதிக விருப்பம் என்று வீடியோ வெளியிட்டார் வனிதா.

மீண்டும் ஃபார்மில்

மீண்டும் ஃபார்மில்

பீட்டரை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் தோற்று போய்விட்டதாகவும் கண்ணீர் விட்டார் வனிதா. இருந்த போதும் அடுத்த ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஃபாமுக்கு வந்துவிட்டார் வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

சிக்கென சின்னப்பெண் போல

சிக்கென சின்னப்பெண் போல

இந்நிலையில் வனிதா சில நாட்களுக்கு முன்பு ஏதோ நிகழ்ச்சி தொடர்பாக சட்டீஸ்கர் சென்றார். அங்கு பல புகைப்படங்களையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அதில் சிக்கென சின்ன பெண்ணை போல ஃபுல் மேக்கப்பில் அலறவிட்டார்.

வனிதா நெஞ்சில் டாட்டூ

வனிதா நெஞ்சில் டாட்டூ

அதனை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டீங்க போல என கமெண்ட் பதிவிட்டனர். இந்த போட்டோக்களில் வனிதா, நெஞ்சில் குத்தியிருக்கும் டாட்டூ எடுப்பாக வெளிப்பட்டது. ரன்னிங் லெட்டரில் ஏதோ பெயரை எழுதி இறுதியில் ஹார்ட்டினுடன் வனிதா தனது நெஞ்சில் டாட்டூ வரைந்துள்ளார்.

யாருடைய பெயராக இருக்கும்?

யாருடைய பெயராக இருக்கும்?

இதனை பார்த்த ரசிகர்கள் வனிதா வரைந்திருக்கும் டாட்டூ யாருடைய பெயராக இருக்கும் என மண்டை காய்ந்து வருகின்றனர். மேலும் அந்த டாட்டூ தெரிவது போன்ற லோ நெக் உடை, பல வண்ணங்களில் ஹேர் கலரிங் செய்த போட்டோக்கள் என பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார் வனிதா.

பிரேக்கப் மேக்ப்பா?

பிரேக்கப் மேக்ப்பா?

இவற்றையெல்லாம் பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா என கேட்டுள்ளனர். சில நெட்டிசன்கள், இதுதான் பிரேக்கப் மேக்கப்பா ரொம்ப நல்லாருக்கு என்றும் கலாய்த்துள்ளனர். பலர் பீட்டர் பால் எப்படி இருக்கிறார் என்றும் இன்னும் சிலர் எப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X