எப்போதும் குடி புகை.. திருந்தமாட்டார்.. பீட்டரை பிரிந்துவிட்டேன்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த வனிதா!
சென்னை: தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக நடிகை வனிதா விஜயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்தான வனிதா, வயதுக்கு வந்த மகளை வைத்துக் கொண்டு 40 வயதில் திருமணம் தேவையா என பலரும் விமர்சித்தனர்.

போலீஸில் புகார்
அதோடு பீட்டர் பாலின் முதல் மனைவியும் தன்னுடைய குழந்தைகளுக்கு அப்பா வேண்டும், என்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறி போலீஸில் புகார் அளித்தார். தனது கணவரை வனிதாவிடம் இருந்து மீட்டு தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

டீடோட்லர்
மேலும் பீட்டர் பால் எப்போதும் சரக்கும் கையுமாகவே இருப்பார். சரியான பொம்பளை பொறுக்கி என்றும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பானது. ஆனால் அவருடைய குற்றச்சாட்டுக்களை எல்லாம் பொய் என்று கூறிய வனிதா, பீட்டர் பால் ஒரு டீடோட்லர் என்றார்.

அடித்து விரட்டினார்
இந்நிலையில் கோவாவில் இருந்து திரும்பும் வழியில் பீட்டர் பாலுக்கும் வனிதாவுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. பீட்டர் பால் குடித்து விட்டு தகராறு செய்ததால் அவரை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மாயமாகிவிட்டார்
அதில் கோவாவில் இருந்து புறப்படும் போது பீட்டர் பால் குடித்திருந்ததாகவும் இதனால் கோவாவில் இருந்து சென்னை வரை தானே காரை ஓட்டி வந்தாக கூறியுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகும் காரில் இருந்து இறங்கி பார்க்கிங் ஏரியாவில் இருந்து வீட்டுக்குள் வருவதற்குள் மாயமாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.

குடி சிகரெட் பழக்கம்
கடந்த 3 நாட்களாய் ஆள் வீட்டிற்கு வரவில்லை என்றும், போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்ற வனிதா ஏமாந்துவிட்டேன். முட்டாளாகி தோற்று நிற்கிறேன் என கண்ணீர் விட்டு கதறினார்.

தோற்று போய்விட்டேன்
கடந்த 3 நாட்களாய் ஆள் வீட்டிற்கு வரவில்லை என்றும், போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் சொன்னதெல்லம் உண்மைதான் என்ற வனிதா ஏமாந்துவிட்டேன். முட்டாளாகி தோற்று நிற்கிறேன் என கண்ணீர் விட்டு கதறினார்.

ஏதோ ஒரு காரணம்
ஏதோ ஒரு காரணத்திற்காகதான் இருவரும் சேர்ந்தோம். ஒரு வேளை, என் மூலம் கடவுள் அவருக்கு ஏதோ நல்லது செய்ய நினைத்திருக்கிறார். அதனால்தான் அவருடன் சேர்ந்துள்ளேன். அவருடைய உயிரை காப்பாற்றக் கூட இருக்கலாம். அவருக்கு மாரடைப்பு வந்த போது அப்படியே விட்டிருந்தால் அவர் இறந்திருப்பார்.

ரொம்ப காயப்பட்டுள்ளேன்
என் காதல் உண்மை, நான் லவ் பண்ணது உண்மை. காதலில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு பெண்ணாக ரொம்ப காயப்பட்டுள்ளேன். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. என்னை விட என் மீதுள்ள காதலை விட போதை அவருக்கு முக்கியமாகிவிட்டது.
Recommended Video

பிரிந்து விட்டோம்
நான் உடைந்து போய்விட்டேன். இப்போது பிரிந்துவிட்டோம். ஏதோ காரணத்திற்காக அவரது வாழ்க்கையில் வந்துள்ளேன். இனிமேல் என் மகள்களுக்காக தான் வாழ போகிறேன்.. என் வேலைக்கு துரோகம் செய்ய மாட்டேன், இதிலிருந்து மீண்டு வர கொஞ்ச நாளாகும்.. என தெரிவித்துள்ளார் வனிதா.


Click it and Unblock the Notifications