அருண் விஜயின் அக்கா மகள் திருமணம்.. திருவிழாப்போல கொண்டாடிய குடும்பம்.. வனிதா மட்டும் மிஸ்ஸிங்!

சென்னை: நடிகர் அருண் விஜய்யின் அக்கா அனிதா விஜயகுமாரின் மகள் தியா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தடபுடலாக நடந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதில் வனிதா மட்டும் இல்லாதது அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போதும் இவர், குணச்சித்திர வேடங்களில், சினிமாவில் மட்டுமல்லாமல், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

vanitha only missing in vijayakumar granddaughter diya wedding

நடிகர் விஜயகுமாருக்கு 1969ம் ஆண்டு முத்துக்கன்னு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர், நடிகர் விஜயகுமார் 1976-ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்துகொண்டார்.விஜயகுமார் முத்துக்கன்னு தம்பதியினருக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் என மூன்று பிள்ளைகளும், விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தி,ஸ்ரீதேவி என மூன்று மகள் உள்ளனர்.இதில் ஒரே ஒரு ஆண்வாரிசு என்றால் அது அருண்விஜய் தான்.

விஜயகுமாரின் பேத்தி: இதில் விஜயகுமார் மகள்களில் ஒருவரான அனிதா மருத்துவராக இருக்கிறார். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இதில் தியாவும் அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார். இதில் தியாவுக்கு தில்லா என்பவருடன் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று தியா தில்லா திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

கோலாகல திருமணம்: பந்தக்கால் நடுவது, கடற்கரையில் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத், ஹல்தி ஃபங்க்‌ஷன் என கடந்த ஒரு வாரமாக இந்தத் திருமண விழா களைகட்டி இருந்தது. நேற்று நடைபெற்ற திருமணத்தில், நடிகர் ரஜினிகாந்த், பிரபு,சினேகா,பிரசன்னா, பாக்கியராஜ், மீனா, கேஎஸ் ரவிக்குமார், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். அது மட்டுமில்லாமல் விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் இந்த திருமணத்தை கொண்டாடி தீர்த்துவிட்டனர்.

வனிதா பாவம்: ஆனால், இந்த குடும்பத்தில் ஒருவரான வனிதா கலந்து கொள்ளவில்லை. விஜயகுமாரின் குடும்பத்தினர் யாரும் இந்த திருமணத்திற்கு அவரை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. வனிதா தனது குடும்பத்தோடு சேர்ந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகள் செய்தும், விஜயகுமாரின் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாததால், வனிதா இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார். இதைப்பார்த்து நெட்டிசன்கள், பாவம் வனிதா, அவருக்காக இல்லை என்றாலும் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவாது அவரை மன்னித்து குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவும் என்று இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X