நடமாடும் நகைக்கடை ஹரி நாடாருக்கு ஜோடியான வனிதா.. தொடங்கியது 2கே அழகானது காதல் படப்பிடிப்பு!
சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயக்குமார். சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்த வனிதா அதன் பிறகு பெரிதாக ஹீரோயின் ரோல் எதிவும் பண்ணவில்லை.

இரண்டாவது திருமணம்
பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டிலானார். ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்பட முதல் கணவரான நடிகர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

விஷுவல் எடிட்டர்
அந்த திருமணமும் விவாகரத்தில் முடிய டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தனது யூட்யூப் சேனலுக்கு உதவியாய் இருந்த பீட்டர் பால் என்ற விஷூவல் எடிட்டரை திருமணம் செய்தார் வனிதா.

பீட்டரை பிரிந்தார்
இதனால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வனிதா, பின்னர் பீட்டர் பால் மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்றும் அவருடன் இனி வாழ முடியாது என்று கூறியும் பிரிந்துவிட்டார். இந்நிலையில் நடிகை வனிதா, யூட்யூப் சேனல், தொலைக்காட்சி நிகழ்ச்சி என பிஸியாக உள்ளார்.

பாம்பு சட்டை படம்
இதனிடையே வனிதா சினிமாவில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. ஆதம் தாசன் இயக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டரில் வனிதா நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன், ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.

மற்றொரு படம்
அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் தான் நடிக்கும் மற்றொரு படம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
நடமாடும் நகைக்கடை
அதவாது 2கே அழகானது காதல் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் கழுத்து நிறைய தகதகவென நகைகளுடன் வலம் வரும் பனங்காட்டுப் படை கட்சியின் ஹரி நாடாருக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார்.

ஸ்கர்ட் டாப்பில் வனிதா
படத்தின் போஸ்டரிலும் நீண்ட முடி, கழுத்து மற்றும் கைகளில் ஜொலிக்க ஜொலிக்க நகைகள் என பிரம்மாண்டமாக உள்ளார் ஹரி நாடார். வனிதாவும் ஸ்கர்ட் டாப்ஸில் செம க்யூட்டாக உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











