மகள்கள் முன் பீட்டர் பாலுடன் கேவலமாய் போஸ் கொடுத்த வனிதா.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மகள்கள் முன்பு பீட்டர் பாலுடன் நடிகை வனிதா கேவலமாய் போஸ் கொடுத்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர்.

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்குமே தோளுக்கு உயர்ந்த பிள்ளைகள் இருப்பதால் அவர்களின் திருமணம் பெரும் விமர்சனமானது.

போதா குறைக்கு பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் தனது கணவர் தனக்கு வேண்டும் என்று கூறி போலீஸில் புகார். இதனால் வனிதாவின் திருமண விஷயம் தெருவுக்கு வந்தது.

காசு பார்க்கும் வனிதா

காசு பார்க்கும் வனிதா

இருந்தபோதும் அனைத்தையும் அசால்ட்டாக ஹேண்டில் செய்தார் வனிதா. தொடர்ந்து யூட்யூப் சேனலில் சமையல் நிகழ்ச்சி, கணவருடன் சேர்ந்து நேர்க்காணல் என தனது திருமணத்தை வைத்தும் காசு பார்த்தார் வனிதா.

ஹேட்டர்ஸின் பிபி

ஹேட்டர்ஸின் பிபி

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார் வனிதா. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கணவருடன் லிப்லாக் கொடுப்பது படுக்கையறை போட்டோக்களை ஷேர் செய்வது ஹேட்டர்ஸின் பிபியை எகிற வைத்து வந்தார்.

வனிதா சர்ச்சை

வனிதா சர்ச்சை

சமீபத்தில் மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியை தனக்கு யார் என்றே தெரியாது என கூறி சர்ச்சையில் சிக்கினார். இதற்காக கண்டபடி அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏதாவது கருத்து சொல்லி வருகிறார்.

குடும்பத்துடன் கோவாவில்

குடும்பத்துடன் கோவாவில்

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் வனிதா. இதற்காக காரிலேயே கர்நாடக மாநிலம் ஹூப்ளி சென்றார். அதன்பிறகு அங்கிருந்து குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார்.

கணவருடன் ரொமான்ஸ்

கணவருடன் ரொமான்ஸ்

கோவாவில் இருந்தப்படி தினமும் சில பல போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் வனிதா. கணவருடன் ரொமான்ஸ், சரக்குடன் குதூகலம், மகள்களுடன் ஜாலி, பீச்சில் கொண்டாட்டம் என நாள்தோறும் ஒரு போட்டோவை ஷேர் செய்து வருகிறார்.

மோசமான போஸ்

மோசமான போஸ்

இந்நிலையில் தற்போது அவர் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இருவருக்குமே வயதுக்கு வந்த மகள்கள் இருக்கும் போது இது தேவையா என விளாசியுள்ளனர். அவ்வளவு நெருக்கமாய் நின்றப்படி மோசமாக ஒரு போஸை கொடுத்துள்ளனர் வனிதாவும் பீட்டர் பாலும்.

ஒரு குடும்பத்தை அழித்து

ஒரு குடும்பத்தை அழித்து

அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் படு கேவலமாக திட்டியுள்ளனர். வனிதா மற்றும் பீட்டர் பாலின் இந்த போட்டோவை பார்த்த இவர், அடுத்தவர் வலியினால் வரும் சந்தோசம் நிலைக்காது ஒரு குடும்பத்தை அழித்து இன்னொரு குடும்பம் நிலைக்காது என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிக நாட்கள் இல்லை

அதிக நாட்கள் இல்லை

மேலும் சிலர் இந்த வாழ்க்கை அதிக நாட்கள் இல்லை என்றும், பீட்டர் பால் உனக்கும் ஒரு பொம்பள பிள்ளை இருக்குதானே.. அந்த பிஞ்சு மனசுக்கு எவ்ளோ வலிக்கும் என்றும் கேட்டுள்ளனர் நெட்டிசன்கள். ஒரு பெண்ணின் வாழ்கை மன வேதனையும் வயிற்றெரிச்சலும் உங்களை சும்மாவிடாது என்றும் நெட்டிசன்கள் விளாசியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X