சூரியா தேவிக்கு கொரோனா.. பிரார்த்திக்கும் வனிதா.. நீங்களும் செக் பண்ணுங்க.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்

By

சென்னை: கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சூரியாதேவி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vanitha Tweet • Surya Devi க்கு கொரோனா உறுதி

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

சூரியா தேவி

சூரியா தேவி

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியா தேவி என்ற பெண்ணும் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

நடிகை வனிதா புகார்

நடிகை வனிதா புகார்

வனிதாவும் அதற்குப் பதிலளித்து, பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். பின்னர், நடிகை வனிதா, சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தன்னைப்பற்றி சூரியாதேவி தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் வடபழனி காவல்நிலையத்தில் நடிகை வனிதா மீது, சூரியா தேவி புகார் அளித்தார்.

மன்னிப்பு கேட்குமாறு

மன்னிப்பு கேட்குமாறு

பின்னர் இந்த புகார்கள் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வனிதாவையும், சூரியா தேவியையும் போலீசார் அழைத்து விசாரணை செய்தனர். தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை என்று வனிதா சொன்னார். சூரியாதேவிவிடம், இனி வனிதாவை விமர்சிப்பதை நிறுத்தவும் வனிதாவிடம் மன்னிப்பு கேட்குமாறும் போலீசார் அறிவுறுத்தினர்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

அதை ஏற்காமல் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக போலீசார், சூரியா தேவியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சூரியா தேவி மீது புகார் கொடுத்த நடிகை வனிதா, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ட்விட்டரில் நேற்றிரவு கூறி இருந்தார்.

கவலை அடைந்துள்ளனர்

கவலை அடைந்துள்ளனர்

இந்நிலையில், இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், சூரியா தேவியை போலீஸூம் சுகாதாரத்துறையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளார். 'சூரியாதேவியை இரண்டு துறையினரும் தேடி வருகின்றனர். அவர் போனை எடுக்காமல் இருக்கிறார். அவருக்கு கொரோனா இருப்பதால், அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருப்பதால் கவலை அடைந்துள்ளனர். கடவுளே என்று கூறியுள்ளார்.

நீங்களும் இருந்தீங்களே

நீங்களும் இருந்தீங்களே

இதற்கு நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவங்க கூட நீங்களும் இருந்தீங்களே, உங்களையும் செக் பண்ணிக்கோங்க அக்கா என்று சிலர் தெரிவித்துள்ளனர். அதற்கு தனக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார் வனிதா. இன்னொருவர், சூரியாதேவி நேற்றிரவும் இன்று காலையும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் உங்களை இன்னும் மிரட்டலோடு பேசியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X