ஆண்டவனே என் பக்கம்தான் இருக்கான்.. நீ மூடிட்டு உன் வேலைய பாரு.. டிவிட்டரில் சீறிய வனிதா!

சென்னை: தன்னை நடிப்பதாக கூறிய டிவிட்டர் பயனாளியை நடிகை வனிதா சரமாரியாக விளாசியுள்ளார்.

Recommended Video

இது Celebrity Rakshabandhan • Suriya, Arun Vijay, Chiranjeeve வீட்டு விசேஷம்

நடிகர் விஜயக்குமார் நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா. குழந்தை நட்சத்திரமாகவும் குமரியாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக கொடிக்கட்டி பறந்த இவர், குமரியாக சோபிக்கவில்லை. இதனை தொடர்ந்து திருமணம் குழந்தைகள் குடும்பம் என செட்டிலானார்.

இரண்டு விவாகரத்து

இரண்டு விவாகரத்து

ஆனால் அதிலும் தாக்குப்பிடிக்க முடியாமல் போன வனிதா இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். பின்னர் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டு கெதரில் இருந்து விலகினார். சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

இடைப்பட்ட காலத்தில் வனிதாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனைகள் காரணமாக அப்பா அண்ணன் என குடும்பத்தினர் மீதே போலீஸில் புகார் அளித்தார் வனிதா. இதன்காரணமாக ஏற்பட்ட பிரச்சனையால் குடும்பத்தினர் யாரும் அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் உள்ளனர்.

மகள் வாழ்த்து

மகள் வாழ்த்து

இந்த பிரச்சனைகள் காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் விஜயக்குமார் கடந்த 29 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது மகளான வனிதா விஜயக்குமாருக்கு டிவிட்டர் மூலம் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

சரித்திரம் இல்லை

சரித்திரம் இல்லை

இதனை பார்த்த டிவிட்டர் பயனாளி ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தந்தையைப் பற்றிய உங்கள் நேர்காணல்கள் அனைத்தையும் நினைவில் கொள்கிறேன்..தினை விதைத்தவன் தினை அறுப்பான் ... எந்த நிலைமையிலும் பெற்றோர் பற்றி தப்பா பேசினவங்க ஒரு நாளும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை.. இப்போது சிறப்பாய் நடிக்கிறாய் என்று கூறினார்.

என்னுடைய பிரச்சனை

என்னுடைய பிரச்சனை

இந்த டிவிட்டை பார்த்த நடிகை வனிதா, அந்த பயனாளியை லெஃப்ட் அன்ட் ரைட்டு வாங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அது என்னுடைய பிரச்சனை, நான் எதிர்கொண்டேன், என் குடும்பத்தை பற்றி பேச எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

உன் லைஃப்ப பாரு

உன் லைஃப்ப பாரு

மேலும் நான் நன்றாகவே இருக்கிறேன்... நல்லாவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. ஆண்டவனே என் பக்கம் தான் இருக்கான்.. அதனால நீ மூடிட்டு உன் லைஃப்ப பாரு.. என படு காட்டமாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X