அந்தக் குழந்தைகளை பாதுகாக்கணும்.. நானும் மனுஷிதான்.. சூரியா தேவிக்கு உதவ முன் வந்த நடிகை வனிதா!

By

சென்னை: தன்னை விமர்சனம் செய்த சூரியா தேவிக்கு உதவ முன் வந்துள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட KPY Nanjil Vijayan

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

சூரியா தேவி

சூரியா தேவி

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியா தேவி என்ற பெண்ணும் தொடர்ந்து நடிகை வனிதாவின் திருமணத்தைப் பற்றியும் நடிகை வனிதா பற்றியும் பல்வேறு கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

சூரியாதேவி கைது

சூரியாதேவி கைது

வனிதாவும் அதற்குப் பதிலளித்து, பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். பின்னர், சூர்யா தேவி மீது போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதா. அந்தப் புகாரில், தன்னைப் பற்றி சூரியாதேவி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் வனிதா மீதும், சூரியா தேவி புகார் அளித்தார். பின்னர் சூரியாதேவி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நாஞ்சில் விஜயன்

நாஞ்சில் விஜயன்

இந்நிலையில் அவருக்கும் அவரை விசாரித்த பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தாமல் தலைமறைவானார். இந்நிலையில் சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் நெருக்கமாக அமர்ந்து, மது அருந்துவது போன்ற புகைப்படத்தை நடிகை வனிதா வெளியிட்டார். அது அவர்கள் ஜூஸ் குடிக்கும் போட்டோ என்பதை அவர்கள் தெரிவித்தனர்.

மன்னிப்புக் கேட்டார்

மன்னிப்புக் கேட்டார்

இதையடுத்து நாஞ்சில் விஜயன், வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டார். இப்போது சூரியாதேவி தனக்கு முன் ஜாமின் வாங்க உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகரிடம் யூடியூப் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகை வனிதாவிடம் ட்விட்டரில் ஒருவர், சூரியாதேவிக்கு ஆதரவாக கோரிக்கை ஒன்றை வைத்தார்.

அவருக்கு உதவுங்கள்

அவருக்கு உதவுங்கள்

அதில், சூரியாதேவி இந்தப் பிரச்னையில் அம்பு மட்டுமே. அவரது விமர்சனத்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இப்போது அவர் நிலைமை சரியாக இல்லை. அவர் மீதான எஃப்.ஐ.ஆர், அவரை விளிம்புக்கு தள்ளுகிறது. பெரிய மனது பண்ணி அவருக்கு உதவுங்கள். அவருக்கு இப்போது சிகிச்சை தேவை' என்று கூறியிருந்தார்.

நானும் மனுஷிதான்

நானும் மனுஷிதான்

இதையடுத்து நடிகை வனிதா, 'இதுபற்றி ஏற்கனவே அதிகாரிகளிடம் பேசிவிட்டேன். சூரியாதேவிக்கு உதவி செய்ய, முதலில் அவர் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு விளையாடிக் கொண்டிருப்பதற்கு கொரோனா ஒன்றும் சாதாரண வைரஸ் அல்ல. அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு நான் நிச்சயமாகத் தூண்டமாட்டேன். நானும் மனுஷிதான் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X