பயமா..? வனிதாவை லைவுக்கு கூப்பிட்டேன்.. மாட்டேன்னு சொல்லிட்டாப்ல.. நடிகை கஸ்தூரி பரபர போஸ்ட்!

By

சென்னை: நடிகை வனிதாவை லைவுக்கு அழைத்தேன், அவர் வர மறுத்துவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது. சமூக வலைதளங்களில் வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

அநாகரிகமாக பேசினார்

அநாகரிகமாக பேசினார்

அவர்களை கடுமையாகச் சாடி, சமூக வலைதளப் பக்கத்தில் பதில் அளித்திருந்தார் வனிதா. இது சமூக வலைதளங்களில் பரபரப்பானது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாக பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, ஆவேசமானார்.

தரக்குறைவாக

தரக்குறைவாக

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக கஸ்தூரியும் பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாகவும் அறிவித்தார். பின்னர் கஸ்தூரி, உங்களை கேள்விகேட்டால், அவர்களை அவதூறாகப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். சிங்கப் பெண்ணே, சிரிப்பாக வருகிறது' என்று கூறியிருந்தார்.

பார்த்து வளர்ந்த வனிதா

பார்த்து வளர்ந்த வனிதா

பின்னர் ஒரு நெட்டிசன், நீங்களும் வனிதாவும் இதற்கு முன் நட்பாக இருந்தவர்கள்தானே என்று கேட்டிருந்தார். அதற்கு கஸ்தூரி, 'நட்பு இல்லை. நான் பார்த்து வளர்ந்த பெண் வனிதா. இப்போதும் அவர் மீது எனக்கு எந்த பகையோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. பொதுவெளியில் வனிதா அவர்கள் மிகவும் கொச்சையாக பேசி பலரையும் காயப்படுத்தி வருகிறார். அந்த போக்கை மாற்றி கொண்டால் இப்போதும் உதவ தயாராக உள்ளேன்' என்று கூறி இருந்தார்.

கொஞ்சம் மிருகம்

கொஞ்சம் மிருகம்

இந்நிலையில் நடிகை கஸ்தூரி, தனது இன்ஸ்டாகிராமில், புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 'கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்' என்ற பாடலை கேப்ஷனாக்கி இருக்கிறார் அதற்கு. இந்த போட்டோ வைரலாகி வருகிறது. இதற்கு பலர் கமென்ட் போட்டுள்ளனர். சில கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் கஸ்தூரி. ஒருவர், ஏன் வனிதா கூட மட்டும் லைவ் வரமாட்டேங்கறீங்க, பயமா? என்று கேட்டுள்ளார்.

Recommended Video

Kasturi Shankar eating in Live • Arnab Goswami
வனிதா வீடியோ

வனிதா வீடியோ

இதற்கு, 'நான் கூப்பிட்டேன். அவர் மறுத்துட்டார் என்று தெரிவித்துள்ள கஸ்தூரியிடம், வனிதா வீடியோவை சஸ்கிரைப் பண்ணியிருக்கீங்களா? அவங்களோட குக்கிங் வீடியோஸ் பார்ப்பீங்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, அதில் இருக்கிற கமென்ட்களை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார். 'ஒரு பக்கம் தேவதை, மறுபக்கம் அழகான டெவில் என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X