Bigg Boss 3 வனிதா சொல்வதை பார்த்தால் கமல் சொன்னது தான் பொய்யா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Vanitha : வனிதா மீது தப்பில்ல, அந்த 'நாட்டாமை'யை தான் சொல்லணும்- வீடியோ

சென்னை: பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளதை பார்த்தால் கமல் ஹாஸன் கூறியது தான் பொய் என்று தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் 3 வீட்டில் குறைந்தது 90 நாட்களுக்கு மேலாவது இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வனிதா விஜயகுமார் இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார். மீண்டும் குழந்தைகளை பார்த்த மகிழ்ச்சியில் உள்ளார் வனிதா.

தனக்கு வாக்களிக்காமல் குழந்தைகளுடன் விரைவில் சேர்த்து வைத்த பார்வையாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

வனிதா

வனிதா

பிக் பாஸ் வீட்டிற்கு செல்பவர்கள் எங்கு பார்த்தாலும் கேமரா இருப்பதை ஒரு வாரத்தில் மறந்துவிடுவார்கள் என்று கமல் ஹாஸன் தெரிவித்திருந்தார். ஆனால் வனிதாவோ வேறு விதமாக கூறுகிறார். பிக் பாஸ் குறித்த சில உண்மைகளை சொல்லிவிட்டார் வனிதா.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் இயல்பாக இருந்தார்கள். அதன் பிறகு கேமராக்கள் இருப்பதை உணர்ந்து போலியாக முகமூடி போட்டுக் கொண்டுள்ளனர். அனைவரும் போலியாக உள்ளனர், இயல்பாக இல்லை என்று தெரிவித்துள்ளார் வனிதா. கமல் ஹாஸன் தெரிவித்த இந்த ஒரு விஷயம் மட்டும் பொய்யாகவில்லை, மேலும் ஒரு விஷயமும் பொய்யாகிவிட்டது.

வாழ்க்கை

வாழ்க்கை

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் முன்பு வெளியான ப்ரொமோ வீடியோக்களில் கமல் ஹாஸன் இது வெறும் நிகழ்ச்சி அல்ல நம் வாழ்க்கை என்று தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஆண் போட்டியாளர்களோ இது வெறும் ஷோ தான் வாழ்க்கை எல்லாம் இல்லை என்பது போன்று நடந்து கொள்கிறார்கள். பெண் போட்டியாளர்கள் மட்டுமே இது 100 நாட்கள் கூத்து என்பதை மறந்து நிரந்தரமாக அங்கேயே இருப்பது போன்று நடந்து கொண்டிருக்கிறார்கள்.

போலி

போலி

கவின், முகென், தர்ஷன் ஆகியோருக்கு காதலிகள் இருப்பது தெரிந்தும் பெண் போட்டியாளர்கள் அவர்களுக்காக போட்டி போடுகிறார்கள் என்ற உண்மையை சொல்லிவிட்டார் வனிதா. நான் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் என்னையே தெரிந்து கொண்டேன், வாழ்க்கையில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் போட்டியாளர்கள் கூறியது உண்டு. ஆனால் வனிதா அப்படி எதுவும் தெரிவிக்கவில்லை. நான் எப்பொழுதுமே நானாக தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். வனிதா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சி போர் அடிக்கிறது என்று பார்வையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X