அர்னவ் உண்மை முகம் இதுதான்.. காதல் வந்துட்டா அன்ஷிதா இல்ல எல்லாரும் முட்டாள்தான்.. வனிதா பளீச்!
சென்னை: பிக் பாஸ் 8ம் சீசனில் இரண்டாவது வாரத்தில் இரண்டாவது எலிமினேஷன் ஆக அர்னவ் வெளியேறி இருக்கிறார். அவர் வீட்டில் அதிகம் யாருடனும் பேசவில்லை என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் எலிமினேட் ஆகி இருக்கிறார். இதுகுறித்து வனிதா யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அதில்,பிக் பாஸ் வீட்டில் எப்போதும் அவார்டு கொடுக்கும் போது சண்டை வரத்தான் செய்யும், யாரும் அவ்வளவு சீக்கிரம் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், இந்த சீசனில் அவார்டு கொடுத்ததை அருண், தீபக் எல்லாரும் வரவேற்றார்கள். இந்த அவார்டை ஆண்கள் அணியினர் ரொம்ப பாசிட்டிவா எடுத்துக்கொண்டார்கள். ஆனால், பெண்கள் அந்த அவார்டை ஏற்றுகொள்ளவில்லை. குறிப்பா அர்னவ், அன்ஷிதாவிற்கு சொம்பு தூக்கி என்று அவார்டு கொடுத்திருந்தார். அதனால் அன்ஷிதா ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டார்.

அன்ஷிதா பாவம்: அந்த நேரத்தில் எனக்கு அன்ஷிதாவை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. அவ ரொம்ப உறுதியாக இருக்காங்க, ஆனால், அர்னவ் அப்படி இல்ல, அவர் எக்ஸ்கேப் ஆக பார்க்கிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே நல்ல நட்பு இருக்கும் போது, ஒரு நேஷ்னல் மீடியால, ஒரு பெண்னை அதுவும் தனக்கு நல்ல தெரிந்த ஒரு பெண்னை, அதுவும் தன்னை பற்றி நல்ல தெரிந்து கொண்ட ஒருவர் அப்படி சொல்லும் போது எந்த பெண்ணும் தாக்கிக்கொள்ள மாட்டார்கள். குறிப்பா எல்லா பெண்களுக்கும் ஒரு மோசமான பழக்கம், இருக்கு காதல் என்று வந்துவிட்டால், எல்லாரும் முட்டாள் தான், அதை ஆண்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வெளியேற காரணம்: இந்த சண்டைக்கு பிறகாவது அர்னவ் போய் பேசி இருக்க வேண்டும், ஆனால், அவர் பேசவில்லை அப்படி பேசி இருந்தால் , ஒரு நல்ல கன்டென்ட் கிடைத்து இருக்கும். இதை செய்யாமல் சுனிதா அழும் போது க்யூட்னு சொல்லி இருக்கக்கூடாது. அர்னவ், அன்ஷிதாவிற்கு இடையே சர்ச்சை இருப்பதால் தான், நல்ல கன்டென்ட் கிடைக்கும் என்று நிகழ்ச்சியில் போட்டாங்க, ஆனால், அந்த மாதிரி இருவரும் பர்சனலா எதுவும் பேசலா ரெண்டு பேரும் டைமை வேஸ்ட் பண்ணிட்டாங்க, இதனாலத்தான் அர்னவ் வெளியில் போனார்
அவரின் உண்மை முகம்: மேலும், அர்னவ் வெளியே போவாரு என்று யாரும் எதிர்பார்க்கல, அவரே எதிர்பார்க்கல அதனாலத்தான் அந்த பிக் பாஸ் கொடுத்த கிப்டை ஆத்திரத்தில் தூக்கி போட்டு உடைத்தார். அது மட்டுமில்ல, தீபக், விஷால் எல்லாம் ஒரு க்ரூப்பா செயல்படுகிறார்கள். ஆனால், அர்னவ் தனியாகத்தான் கேம் விளையாடினார். அந்த கோபத்தில் தான் ஜால்ரா என்று பேசினார். இது தான் அர்னவின் உண்மையான முகம், அதை பிக் பாஸ் வீட்டில் காட்டி இருந்தால், வெளியில் போய் இருக்க மாட்டார். அவர் திரும்ப வருவதற்கும் வாய்ப்பு இருக்கு என்று வனிதா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











