என்னால் முடியவில்லை.. இதற்காகதான் அப்படி டிவிட்டினாரா வனிதா.. சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை: நடிகை வனிதாவின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வனிதா பதிவிட்டுள்ள டிவிட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட KPY Nanjil Vijayan

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே கிறிஸ்தவ முறைப்படி நண்பர்கள் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது வனிதா - பீட்டர் பால் திருமணம்.

அசராத வனிதா

அசராத வனிதா

திருமணத்தின் போது அவர்கள் கொடுத்துக்கொண்ட லீப்லாக் போட்டோ வைரலானது. வயதுக்கு வந்த மகளுக்கு முன்னிலையில் இப்படியா என பலரும் அவரது போட்டோவை பார்த்து விமர்சித்தனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத வனிதா படுக்கையறையில் இருந்து லிப்லாக் கொடுத்த போட்டோவை ஷேர் செய்து, இன்னும் வயிறு எரியுங்கள் என்றார்.

துணிச்சல் தேவை

துணிச்சல் தேவை

எந்த பிரச்சனை என்றாலும் துணிச்சலாகவும் அதிரடியாகவும் எதிர்கொள்வதில் வனிதாவுக்கு நிகர் வனிதாதான். யார்.. என்ன.. எப்படி என்று எதையும் பார்க்காமல் தன் வழிக்கு வறுபவர்களை விளாசி தள்ளுவார். மகள்களுடன் இந்த சமூதாயத்தில் தனியாக வசிக்கும் தனக்கு இந்த துணிச்சல் அவசியம் தேவை என சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்.

ஆதரவு

ஆதரவு

அவருடைய அடாவடி பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், பலர் அதை ரசித்தும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் அவரது நடவடிக்கைளை விமர்சித்து வரும் அதே நேரத்தில் மற்றொரு கூட்டம் ரசித்து அவரை சிங்கப்பெண்ணே என அழைத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றும் முடியவில்லை..

ஒன்றும் முடியவில்லை..

எப்போதும் துணிச்சலாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் வனிதா இன்று சற்று கலக்கத்துடன் டிவிட்டியுள்ளார். அதாவது, சொல்ல நிறைய இருக்கிறது... என்னால் ஒன்றும் முடியவில்லை. கடவுள் மிகப்பெரியவர்.. நம்புங்கள்.. எல்லாமே ஒரு காரணத்திற்காகத்தான் நடக்கிறது.. வாழ்க்கை கடினமானதே... எதிர்கொள்ளுங்கள்... எல்லாமே சரியாகும்., கஷ்டத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்,, திருப்பி அடியுங்கள்... இந்த உலகுக்கு உங்களால் முடிந்தால் காட்டுங்கள்... என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை

அவரது கணவரான பீட்டர் பால் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வனிதாவின் இந்த உருக்கமான பதிவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பீட்டர் பால் குடிக்கு அடிமையாகி மறுவாழ்வு மையத்தில் இரண்டு முறை சிகிச்சை பெற்றதாக அவரது முதல் மனைவியும் மகனும் கூறியிருந்தனர்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

பீட்டர் பாலே வனிதாவுடன் சேர்ந்து தங்களின் யூ டியூப் சேனலில் நேர்க்காணல் அளித்த போது உடல் நலக்குறைவால் தான் மரணத்தின் விளிம்புக்கு சென்று வந்ததாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது திடீரென பீட்டர் பால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வனிதா ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X