வனிதா மீது தப்பில்ல, அந்த 'நாட்டாமை'யை தான் சொல்லணும்: சிவகுமார்
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக பலர் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 3 வீட்டில் இத்தனை நாட்கள் அனைவரிடமும் சண்டை போட்டு பார்வையாளர்களிடம் திட்டு வாங்கியவர் வனிதா விஜயகுமார். தினமும் அவரை திட்டி ட்வீட் போட்ட நெட்டிசன்கள் நேற்று அவர் வெளியேற்றப்பட்டதும் மனம் மாறிவிட்டனர்.
குறிப்பாக வனிதா மேடையில் பேசிய பேச்சை கேட்டுத் தான் மனம் மாறிவிட்டார்கள் பார்வையாளர்கள்.
சிவகுமார்
வீட்டில் இருந்தவர்களில் மிகவும் கோபக்காரியாக, சுயநலவாதியாக இருந்தாலும் வனிதா விஜயகுமாருக்காக பாவப்படுகிறேன். அவரின் துணிச்சல், நேர்மையை பாராட்டுகிறேன். அவர் இப்படி ஆனதற்கு அவர் மீது எந்த தப்பும் இல்லை. அவரின் பெற்றோரை தான் சொல்ல வேண்டும். பாடம் கற்பார் என்று நம்புகிறேன் என்று சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமார் தெரிவித்துள்ளார். #BiggBossTamil #BiggBoss3
திருமணம்
வனிதாவுக்கு மூன்று முறை திருமணமானதை வைத்து பலரும் விமர்சித்தார்கள். தற்போது என்னவென்றால் ஆண்கள் பலமுறை திருமணம் செய்தால் குற்றம் இல்லை. அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றமா என்று பிளேட்டை மாற்றி பேசுகிறார்கள். ஒரே நாளில் வனிதாவுக்காக பலர் அந்தர் பல்ட்டி அடித்துவிட்டார்கள்.

பாராட்டு
வனிதாவின் நேர்மையை பாராட்டுவதாக பார்வையாளர்கள் பலர் தற்போது தெரிவித்துள்ளனர். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். அவர் வெளியேற்றப்பட்டதும் வனிதா நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம், இனி பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என்கிறார்கள். எனக்கே டுவிஸ்டா என்று பிக் பாஸே வியக்கும்படி நடந்து கொள்கிறார்கள் பார்வையாளர்கள்.
மிஸ் பண்ணுவோம்
வனிதா தனது குழந்தைகளுக்காக சம்பாதிக்க வசதியாக இருக்கும் வகையிலாவது அவரை இன்னும் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்திருக்கலாம் என்கிறார்கள் பார்வையாளர்கள். குஸ்தி பாண்டாவாக இருந்தாலும் அவரால் தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமானதாக இருந்தது. இனி மொக்கை பீசுகளுடன் மொக்கையாக இருக்குமே என்று பார்வையாளர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











