அம்மாவுடன் போக மாட்டேன், கதறும் வனிதா மகன்: வைரலாகும் வீடியோ

By Siva

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதாவின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

தன்னை பிரிந்து வாழும் மகன் விஜய ஸ்ரீஹரி தன்னுடன் மீண்டும் சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக வனிதா விஜயகுமார் தெரிவித்தார்.

Vanithas videos go viral on social media

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அதிகம் வெறுக்கப்படுபவராக உள்ளார் வனிதா. இந்நிலையில் வனிதா தன் மகன் விஜய ஸ்ரீஹரியை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று தன் தந்தை விஜயகுமாருடன் சண்டை போடும் வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுவனாக உள்ள ஸ்ரீஹரி அம்மாவுடன் போக மாட்டேன் என்று கூறி அழுகிறார். நான் தான் லீகல் கார்டியன் என்று கூறி மகனை பிடித்து இழுக்கிறார் வனிதா. விஜயகுமாரோ நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி பேரனை விட மறுக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் ஸ்ரீஹரிக்கு தன் மீதான கோபம் தீர்ந்துவிடும் என்று யாரோ வனிதாவுக்கு தவறான ஆலோசனை கொடுத்துள்ளனர். பிக் பாஸ் பார்வையாளர்கள் அனைவரிடமும் திட்டு வாங்கும் ஒரே போட்டியாளர் வனிதா தான். வனிதாவுடன் ஒப்பிடும்போது காயத்ரி ரகுராம் எல்லாம் தங்கம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

யார் என்ன சொன்னாலும் காதில் வாங்குவதே இல்லை வனிதா. அவர் முகத்தை பார்த்தாலே பார்வையாளர்கள் கடுப்பாகிறார்கள். வனிதா, ஒரு அம்மாவாக உங்கள் மீது பாவப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஸ்ரீஹரி உங்களை மேலும் வெறுக்கத் தான் போகிறார் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

வனிதா மீது உள்ள கோபத்தால் அவரின் குடும்ப பிரச்சனை தொடர்பான வீடியோக்களை தேடி எடுத்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள் நெட்டிசன்கள். நிஜ வாழ்க்கையிலேயே இப்படி இருக்கும் வனிதாவா பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை அனுசரித்துப் போகப் போகிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மேலும் வனிதாவின் மகன் நீதிபதியே சொன்னாலும் நான் என் அம்மாவுடன் போக மாட்டேன். என் மாற்றான் தந்தையுடன் இருக்க விருப்பம் இல்லை என்று கூறிய மற்றொரு வீடியோவையும் தேடிப் பிடித்து ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X