ராபர்ட் பிக் பாஸ்ல கலந்துக்க நான் தான் காரணம்… ஆனால் என்னைப் பற்றி பேசவே இல்லை: குமுறிய வனிதா

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் நடந்துகொண்டது குறித்து வனிதா ஆதங்கமாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சீனியர் மாஸ்டர்

பிக் பாஸ் வீட்டில் சீனியர் மாஸ்டர்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை 6 பேட்டியாளர்கள் வெளியேறிவிட்டன. இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில், ராம் - ராபர்ட் மாஸ்டர் இடையே பலத்தப் போட்டி காணப்படுகிறது. பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாஸ்டர் என்ற தகுதியில் களமிறங்கிய ராபர்ட், தான் சீனியர் என கூறிக்கொண்டு பல போட்டிகளில் விளையாடாமல் வேடிக்கைப் பார்த்து வருகிறார். ஆனால், தொடர்ந்து தனது ரொமான்ஸால் ரச்சிதாவை மட்டும் கார்னர் செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.

வனிதா ஆதங்கம்

வனிதா ஆதங்கம்

கடந்த சில நாட்களாகவே ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா இடையேயான சீண்டல்கள் கொஞ்சம் அதிகரித்ததாகவே தெரிகிறது. இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் - ரச்சிதா விவகாரம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த வனிதா, நான் ராபர்ட்டிடம் சொன்னேன், பிக் பாஸ் வீட்டுக்குள் போனால் கண்டிப்பாக இப்படியெல்லாம் நடக்கும். லவ் வரும், அப்படி எதும் வந்தா தயவுசெஞ்சு ஒதுங்கி போய்டு. உனக்கு இப்போ லவ் தேவையில்லை என கூறியிருந்ததார். தற்போது ஷகிலாவுடனான ஒரு யூடியூப் சேனலின் நேர்காணலில் பேசிய வனிதா, மீண்டும் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

நான் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்

நான் தான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்

அந்தப் பேடியில், "கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் யாஷிகா ஆனந்த் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார் நிரூப். அதுபோல இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போனாலும் நான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருப்பேன் என்று ராபர்ட் என்னிடம் சொன்னார். அதை நான் உண்மை என நம்பிவிட்டேன். ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல நான் தான் விஜய் டிவியில் பேசி ஓக்கே செய்ய வைத்தேன். சம்பளம் முதல் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தேன். ஆனால் ராபர்ட் மாஸ்டரோ கடைசியில் வீட்டுக்குள் செல்வதற்கு முதல் நாள் திடீரென மாற்றி பேசினார். நான் எதற்காக உன்னை பற்றி பேச வேண்டும் நான் என்னைப் பற்றி பேசவே பிக் பாஸ் வீட்டுக்கு போவதாகக் கூறினார்" என வனிதா தெரிவித்துள்ளார்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை

ஒரு வார்த்தை கூட பேசவில்லை

தொடர்ந்து பேசியுள்ள வனிதா, "பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பின்னர் ராபர்ட் என்னைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. என்றாவது திருந்தி என்னைப் பற்றி பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அது நடக்கவே இல்லை. ஒரு இடத்தில் கேமரா முன் வந்து "தான் பிக்பாஸ் வந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல" என்று சொல்லிவிட்டு 'நான் சொல்வது புரியதுல்ல" என்று மீண்டும் பேசியதை மறக்கவே முடியாது. அது பிக்பாஸ் வந்ததற்கு வனிதா காரணம் இல்லை என ராபர்ட் சொல்வது போல் மறைமுகமாக இருந்தது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பணம் ராபர்ட்டின் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தேன்" எனக் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் தான் வெளியேற அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X