காலையிலேயேவா வெளங்கிடும்: பொங்கலுக்காக வனிதா, சாக்ஷி இடையே மோதல்

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 1 Highlights:: பிஞ்சு குழந்தையை திட்டிய வனிதா விஜயகுமார்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வீடியோவில் பிரச்சனையை காட்டியுள்ளனர்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி எடுத்த எடுப்பிலேயே கிரஷ், மோதல், தெளிவு என்று வேறு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் அபிராமி, கவின், சாக்ஷி ஆகியோர் இடையே முக்கோண காதல் ஏற்படும் என்று ரசிகர்கள் முடிவே செய்துவிட்டார்கள்.

இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பொங்கல்

ப்ரொமோ வீடியோவில் பொங்கல் பிடிக்காது இருந்தாலும் முதல் முறை சாப்பிட்டேன். இருப்பினும் மீண்டும் சாப்பிட முடியாது என்கிறார் சாக்ஷி. அதை கேட்ட வனிதா விஜயகுமார், பொங்கல் உங்களுக்கு பிடிக்காதா இல்லை ஒத்துக்காதா என்று கோபமாக முகத்தை வைத்து கேட்க சாக்ஷி பாவம் போன்று பார்க்கிறார். பொங்கல் பிடிக்காது என்னை பேச விடுங்களேன் என்று சாக்ஷி வனிதாவிடம் கூறுகிறார்.

சண்டை

வனிதா விஜயகுமார் என்றாலே சண்டைக்காரி என்று ஏற்கனவே அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். சாக்ஷி மீது இளசுகளுக்கு கிரஷ் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வனிதா சாக்ஷியை மிரட்டுவது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரை காயத்ரி ரகுராம் வெர்ஷன் 2.0, சொர்ணாக்கா என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள்.

சாப்பாடு

காலையிலேயே சாப்பாட்டுக்காக சண்டையை துவங்கியுள்ளனர். அது எப்படி அனைத்து சீசன்களிலும் சாப்பாட்டுக்கு தான் முதலில் பிரச்சனை வருகிறது பாஸ். இனி அடுத்து யார் பாத்ரூம் கழுவது என்று சண்டை போட்டாலும் போடுவார்கள். இது பிக் பாஸ் வீடா இல்லை சண்டை பாஸ் வீடா?

சிரிப்பு

பிக் பாஸ் 3வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் முதல் சீசனில் உருவான ஓவியா ஆர்மி இன்னும் ஆக்டிவாக உள்ளது. வனிதா, சாக்ஷி இடையேயான பொங்கல் சண்டையை பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு சண்டையா, என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு என்று கூறி ஓவியா பிக் பாஸ் வீட்டில் சிரித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பரபரப்பு

ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு வனிதா சண்டை போட்டார் என்று நம்ப மாட்டோம். பிக் பாஸ் யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நிகழ்ச்சியை பார்த்தால் தான் வனிதா விஜயகுமார் உண்மையிலேயே சண்டை போட்டாரா இல்லையா என்பது தெரியும் என்கிறார்கள் நெட்டிசன்கள். நெட்டிசன்கள் ரொம்பவே உஷாரு தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X