அந்தக் கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி.. இதெல்லாம் கல்ச்சரா.. அதகளம் செய்யும் வனிதா!

சென்னை: கடவுளுக்கே ரெண்டு பொண்டாட்டி, இதெல்லாம் கல்ச்சரா என கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை வனிதா.

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் சர்ச்சையாகி உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காகி உள்ளது. திருமணத்தின் போது இருவரும் மாறி மாறி லிப்லாக் கொடுத்துக் கொண்டனர்.

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் ஆகி பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ந்து முதல் மனைவி அளித்த புகார் என அடுத்தடுத்து சர்ச்சைகளும் வெடித்துள்ளது. அனைத்து விமர்சனங்களுக்கும் தனது யூட்யூப் சேனல் மூலம் பதில் தெரிவித்துள்ளார் வனிதா.

ஏன் போன் பண்ணல?

ஏன் போன் பண்ணல?

மேலும் பீட்டரின் முதல் மனைவியையும் விளாசியிருக்கிறார். அந்த வகையில் வனிதா வெளியிட்டுள்ள வீடியோவில், திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்து இவ்வளவு நாள் வரைக்கும் பீட்டர் பாலின் முதல் மனைவி என்ன செய்து கொண்டிருந்தார். இத்தனை நாட்களில் அவருக்கு போன் பண்ணல? மெஸேஜ் பண்ணல? அவர வீட்டுக்கு போய் பார்த்திருக்க வேண்டியதுதானே.

தேவைன்னா சாலை மறியல்

தேவைன்னா சாலை மறியல்

அவரு அட்ரஸ் கூட தெரியாமல் புருஷன்னு வாழ்ந்திருக்கீங்களா? அவங்க அம்மாக்கிட்ட பேச வேண்டியதுதானே? உங்க லைஃப்ம்மா.. புருஷன்.. சரி என்கிட்ட பேசியிருக்கலாம்ல. நான் எல்லாம் எவ்ளோ போராட்டம் பண்ணியிருக்கேன். தேவைன்னா இப்போவும் சாலைமறியல் பண்ணுவேன். கிராமத்துல இருக்குற பொம்பளைங்க எல்லாமே போராட்டம் பண்றாங்க.

கடவுளுக்கே 2 பொண்டாட்டி

கடவுளுக்கே 2 பொண்டாட்டி

உங்க பிள்ளைங்ககிட்ட என் நம்பர் இருக்கு என் குழந்தைங்க நம்பர் இருக்கு.. அவங்க மூலமா பேசியிருக்கலாமே. கல்ச்சர் பத்தி யாரும் பேசாதீங்க.. கடவுளே ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்காரு.. அது கல்ச்சர் இல்லையா.. சூம் கால்ல கல்யாணம் பண்றாங்க அதான் கல்ச்சரா? இந்துக்கள் மாஸ்க் போட்டு கல்யாணம் பண்றாங்க.. அது கல்ச்சரா?

எனக்கு ஆதரவா இல்ல

எனக்கு ஆதரவா இல்ல

போலீஸ் கம்ப்ளையன்ட் எடுக்கலன்னு சொல்றீங்க. நியாயமான கம்ப்ளையன்ட்டா இருந்தா போலீஸ் ஆக்ஷன் எடுப்பாங்க. போலீஸ குற்றம்சாட்டி நான் 100 கம்ப்ளையன்ட் கொடுத்திருக்கிறேன். என்ன அடிச்சாங்கன்னு, ஏன்னா அதெல்லாமே உண்மை. உண்மை இருந்தா போலீஸ் புகார் எடுப்பாங்க. போலீஸ் ஒன்னும் வனிதாவுக்கு ஆதரவா இல்ல.

டீடோட்டலர்

டீடோட்டலர்

அவர புருஷன்னு சொல்றீங்க.. பொம்பளை பொறுக்கி, குடிக்காரன்னு சொல்றீங்க.. எனக்கு தெரியும் அவரு ஒரு டிடோட்டலர், வெஜ்ட்டேரியன், ஆல்கஹால் கூட எடுக்க மாட்டாரு. அன்னைக்கு ஓபன் பண்ண ஷாம்பெய்ன் பாட்டில் நான் ஆல்கஹாலிக் இப்போக்கூட நான் அந்த க்ளீப்பீங் போட்டு காட்டுவேன்.. அவரு அவ்ளோ நல்லவரு..

ஏன் போனீங்க?

ஏன் போனீங்க?

நான் பத்தினி, நான் ஹவுஸ் வொய்ஃப்ன்னு சொல்றீங்க.. உங்க புருஷன், உங்க குழந்தைங்களுக்கு அப்பான்னு அங்கீகாரம் வேணும்னு சொல்றீங்க. இதெல்லாம் தெரிஞ்சுதான் இத்தனை வருஷமா உங்க அம்மா வீட்டுக்கு பொட்டி படுக்கைய தூக்கிட்டு குழந்தைங்களோட போனீங்களா? பொட்டி படுக்கையை தூக்கிட்டு வரலாமே.. வந்து உங்க கணவரோட வாழ்ந்திருக்கலாமே.

ஒரு நடிகரோட மனைவி

ஒரு நடிகரோட மனைவி

பிக்பாஸ் சீசன் இது. பிக்பாஸ் வரல, அதனால ஒரு கேப் கிடைச்சுருக்கு. பிரபலமனா ஒருத்தர பத்தி பேசினா பிரபலமாகலாம்னு பேசுறாங்க. யாருக்கு தெரியும் அடுத்து வர பிக்பாஸ்ல கூட கன்ட்டெஸ்ட்டன்ட்டா போகலாம். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 2ல இந்த மாதரி ஒரு நடிகரோட மனைவி செஞ்சி பப்ளிசிட்டி தேடிக்கிட்டாங்க.

அடுத்தவர் கணவரா பார்க்கல

அடுத்தவர் கணவரா பார்க்கல


பீட்டர புருஷன்னு சொல்றீங்க, அவர பத்தி தப்பு தப்பா பேசி அவரு பேரையே டேமேஜ் பண்ணிட்டீங்க.. இப்போ என் புருஷன்தான், எனக்கு வேணும்ங்றீங்க.. என்ன சொல்ல வர்றீங்க புரியல.. நான் யாருடைய கணவரையும் பிடுங்கல.
அன்புக்கு ஏங்கின ஒரு மனுஷன பார்த்தேன், அன்பு கொடுக்குற ஒரு மனுஷனா பார்த்தேன். அடுத்தவர் கணவரா பார்க்கல.

கிஸ் பண்றது தப்பே இல்ல

கிஸ் பண்றது தப்பே இல்ல

குழந்தைங்க முன்னாடி கிஸ் பண்றது தப்பே இல்ல.. கிறிஸ்தவ முறையில் இதெல்லாம் சகஜம். என் பிரச்சனை பத்தி எனக்கு தெரியும் நீங்க யாரும் என் லைஃப் பத்தி பேசாதீங்க.. சிங்கில் மதரா இருக்குறது எவ்ளோ கஷ்டம்னு தெரியுமா உங்களுக்கு.. என் குழந்தைங்கதான் எனக்கு குடும்பம்..

Recommended Video

Lip Lock குடுத்தா தப்பா? முதல் மனைவியை கிழித்த Vanitha
நான் தப்பு பண்ணல

நான் தப்பு பண்ணல

யார் புருஷனையும் யாரும் பிரிச்சு கூட்டிட்டு வரல.. நான் எந்த தப்பும் பண்ணல.. என்னை நீங்க என்ன திட்டினாலும் எனக்கு பணம்தான் வருது. பாப்புலாரிட்டி ஏறுது.
வனிதா கல்யாணம் கூட சேனல்ஸ்க்கு டிஆர்பிதான்.. இவ்வாறு விளாசி தள்ளியிருக்கிறார் வனிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X