'இது நான் எதிர்பார்க்காத ஒன்று.. பீட்டர்பால் பற்றி குறை சொல்ல விருப்பம் இல்லை..' வனிதா விஜயகுமார்!

By

சென்னை: இந்தப் பிரச்னை எதிர்பாராதது என்றும் பீட்டர் பால் பற்றி குறை சொல்ல விருப்பம் இல்லை என்றும் நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

Recommended Video

தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை வனிதா விஜயகுமார், 2007 ஆம் வருடம் அவரை விவாகரத்து செய்தார்.

பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா. 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

எட்டு வருடங்களுக்குப் பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்துகொண்டதாக புகார் கூறியிருந்தார்.

கஸ்தூரி சங்கர்

கஸ்தூரி சங்கர்

இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தனர். சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகைகள் கஸ்தூரி சங்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், யூடியூப் பிரபலம் சூரியா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் வனிதாவின் திருமணம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர்.

திடீர் பிரச்னை

திடீர் பிரச்னை

இது பெரும் சர்ச்சையானது. பின்னர் பிரச்னைகள் ஓய்ந்து கடந்த சில மாதங்களாக, சுமூகமாகச் சென்றுகொண்டிருந்த பீட்டர் பால்- வனிதா வாழ்க்கையில் சமீபத்தில் திடீர் பிரச்னை. இருவரும் கோவாவுக்கு டூர் சென்றுவந்த நிலையில், அங்கிருந்து பீட்டர்பாலை, வனிதா விரட்டி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாயின.

கொட்டி தீர்த்துள்ளார்

கொட்டி தீர்த்துள்ளார்

இந்நிலையில் நடிகை வனிதா சமூக வலைதளப் பக்கத்தில் ஏழெட்டு பதிவுகளை போட்டு தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் யாருக்கும் இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டியதில்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை. என்னால் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும்.

அதிசயம் நடக்க

அதிசயம் நடக்க

என் பார்ட்னரை வெளிப்படுத்துவதும் அவரைப் பற்றி பழி சொல்வதும் எனக்கு பழக்கமில்லை. அதன் மூலம் மற்றவர்களிடம் அனுதாபத்தைப் பெற விரும்பவில்லை. இது நான் எதிர்பாராதது. ஆனால் நடந்துவிட்டது. என் குழந்தைகள் மற்றும் என்னைச் சுற்றி உள்ளவர்களை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். நான் அதிசயம் நடப்பதற்காக பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நானே எதிர்கொள்வேன். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X