வாழ்க்கை கணிக்க முடியாதது.. எவருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. வனிதா உருக்கம்!
சென்னை: கணவர் பீட்டர் பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்க்கையை கணிக்கவே முடியாது என உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகை வனிதா.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த ஜூன் மாதம் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். மகள்களின் ஒப்புதலுடன் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பாலின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் முடிந்தது முதலே அடுக்கடுக்காக பிரச்சனைகள் ஆரம்பித்தன.

ஹாட் டாப்பிக்
இதனால் கடந்த ஜூன் மாதம் முதல் மீடியாக்களில் வனிதாவின் திருமணமும் அதுதொடர்பான பிரச்சனைகளும்தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. தனது மூன்றாவது திருமணம் குறித்து கருத்து தெரிவித்தவர்களை யார், என்னவென்றெல்லாம் பார்க்காமல் லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார் வனிதா.

திடீர் நெஞ்சுவலி
தொடர்ந்து தங்களின் காதலை வெளிப்படுத்தும் வகையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் வனிதாவின் கணவரான பீட்டர் பால் நேற்று திடீரென நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார்.

ஒரு பக்கத்திற்கு அறிக்கை
இதனை தொடர்ந்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் பீட்டர் பால். இந்நிலையில் திருமணம் என்பது ஒரு சட்டப்படியான ஆவணம் மட்டும் கிடையாது என்றும் எங்களை எதுவாலும் பிரிக்க முடியாது என்றும் ஒரு பக்கத்திற்கு அறிக்கை விட்டார் வனிதா.

எது சிறந்தது..
தொடர்ந்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வரும் வனிதா, உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். நீங்கள் நிபந்தனையின்றி கடவுளை நம்பும்போது..அவர் உங்களை நித்தியமாக நேசிக்கிறார், ஒரு தாய் தனது குழந்தையை அறிந்திருப்பதைப் போல உங்களுக்கு எது சிறந்தது என்று தெரியும்.

நான் பயணிக்கிறேன்
மற்றவர்களுக்கு கருத்துக்கள் இருக்க முடியும், ஆனால் தாய்மார்களின் உள்ளுணர்வு மட்டுமே செயல்படும். நான் கடவுளுடன் உறுதியான உறவில் இருக்கிறேன். வாழ்க்கை ஒரு பயணம் மற்றும் நான் அந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
மற்றவர்களின் பாதையில் கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள். வாழ்க்கை கணிக்க முடியாதது மேலும் எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே உங்கள் வாழ்க்கை சரியானது என்று நினைத்து மற்றவர்களை கேலி செய்யாதீர்கள்.

கடவுள் விளையாடுகிறார்..
கடவுள் ஒரு சராசரி நகைச்சுவை உணர்வைக் கொண்டிருக்கிறார், அவர் பொழுதுபோக்கை விரும்புகிறார்.. இவ்வாறு கடவுள் தனது வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருப்பதாக மறைமுகமாகவும் உருக்கமாகவும் தெரிவித்துள்ளார் வனிதா. வனிதாவின் இந்த பதிவுகளை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் ஆறுதல்
தயவு செய்து எப்போதும் போல தைரியமாக இருங்கள் வனிதா, கடவுள் உங்களுடன் இருக்கிறார். நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என ஆறுதல் கூறி வருகின்றனர். உண்மைதான் வனிதா வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றுதான் என்று பலரும் அவருடைய டிவிட்டுக்கு பதில் அளித்து வருகின்றனர்.

என்ன ஆனது?
இன்னும் சில ரசிகர்கள் பீட்டர் பால் எப்படியிருக்கிறார் இப்போது அவரது உடல்நிலை சரியாகிவிட்டதா என்றும் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் நலமுடன் திரும்பி வருவார் என்றும் இவ்வளவு கவலைப்படுகிறீர்களே அவரது உடலில் என்ன பிரச்சனை என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











