வடிவேல் பாலாஜியா? அது யாரு.. நான் பார்த்ததுக்கூட கிடையாது.. வாயை கொடுத்து வம்பை வாங்கிய வனிதா!

சென்னை: மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை யாரென்று தனக்கு தெரியவே தெரியாது என்று கூறிய நடிகை வனிதாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

கதறி அழுத Robo shankar குடும்பம் #RIPVadivelBalaji

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் காலமானார். 42 வயது நடிகரின் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அவரது மறைவுக்கு சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

யாருன்னு தெரியாது

யாருன்னு தெரியாது

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்சேதுபதி, குடும்பத்திற்கு நிதியுதவி அளித்தார். அதேபோல் நடிகர் சிவ கார்த்திகேயன் அவரது பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் வனிதா விஜயக்குமார் வடிவேல் பாலாஜியை தனக்கு யாரென்று தெரியாது என டிவிட்டியுள்ளார்.

பார்த்ததே இல்லை

பார்த்ததே இல்லை

அதாவது, என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை... அவர் யார் என்றே எனக்கு தெரியாது. நான் பார்த்ததும் கிடையாது.. அவருடன் பணிபுரிந்ததும் கிடையாது. அவர் திறமைசாலி என கேள்விபடுகிறேன். இப்படி ஒன்றை நினைத்துக்கூட பார்க்காத அவரின் குடும்பத்திற்கு என்னுடைய எண்ணமெல்லாம் செல்கிறது என பதிவிட்டிருந்தார்.

அங்கதான் வேலை?

அங்கதான் வேலை?

இதனை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் மத்த சேனலில் உள்ளவர்களுக்கு எல்லாம் வடிவேல் பாலாஜி பற்றி தெரிந்திருக்கிறது. உங்களுக்கு தெரியவில்லையா என்று விளாசியிருக்கின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், அவருக்கு தெரிந்ததெல்லாம் விஜய் அஜித் மட்டும்தான். வேலை செய்றது விஜய் டிவிலதான் ஆனா தெரியாது போல என சாடியிருக்கின்றனர்.

அவர் என்னுடன் பணியாற்றவில்லை

அவர் என்னுடன் பணியாற்றவில்லை

அதற்கும் பதிலளித்துள்ள நடிகை வனிதா விஜயக்குமார், கடவுள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை இதற்கு முன் பார்த்ததே இல்லை. இப்போது கலக்கப்போவது யாரு லைவ் நிகழ்ச்சியை பார்க்கிறேன், ஏனெனில் நான் அந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜ்.. அவர் கடந்த காலத்திலோ அல்லது தற்போதோ அவர் என்னுடன் பணியாற்றவில்லை என கூறியுள்ளார்.

தகுதி இருக்கா?

தகுதி இருக்கா?

இதனை பார்த்த ரசிகர்கள், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறது என நினைக்கிறீர்களா? கலக்கப்போவது யாரு நீண்ட ஆண்டுகளாக பிரபலமாக உள்ள ஒரு நிகழ்ச்சி, வடிவேல் பாலாஜி அதில் உள்ள ஒரு ரத்தினம், நல்லா தெரிந்த முகமும்கூட. அந்த நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக இருக்கும் நீங்கள் அதனை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என விளாசியிருக்கின்றனர்.

ஆராய்ச்சி பண்ணாதீங்க

ஆராய்ச்சி பண்ணாதீங்க

அதனால் ஆவேசப்பட்ட வனிதா, இந்த கருத்தை கூறிய குறிப்பிட்ட நெட்டிசன் வெளுத்து வாங்கியுள்ளார். நீங்கள் அதைப்பற்றி எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டிய அவசியமில்லை. குக்கு வித் கோமாளிதான் முதல் சீசன், அது புதிய அனுபவம். நான் வெற்றி பெற்றேன், அது என்னுடைய தொழில், ஜட்ஜ்மென்ட் செய்வதற்கு பழைய எபிசோடுகளை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நான் பட அனுபவமுள்ள பார்வையாளர். ஒரு மனிதர் இறந்து போயுள்ளார். புதிய சர்ச்சையை கிளப்பாதீர்கள், அவரது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X