பாசி பருப்புல சாம்பார் வைக்கலாம் கண்ணுக்குட்டி.. அனிதா சம்பத்துக்கு அட்வைஸ் பண்ணும் வனிதா அக்கா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதாவுக்கு சமைக்க கற்றுக் கொடுப்பதாக கூறியுள்ளார் வனிதா.
விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா விஜயக்குமார்.
பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய வீட்டை போல் அதிகாரம் செலுத்தினார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

சவகாசமே வேண்டாம்
பிக்பாஸ் வீட்டில் யாருமே பேசக்கூடாது என்பதை போல் யார் பேசினாலும் வம்புக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் வனிதா. இதனால் பல போட்டியாளர்கள் வனிதா சவகாசமே வேண்டாம் என ஒதுங்கினர். வனிதாவுக்கு வத்திக்குச்சி வனிதா என்றும் பெயர் வைத்தனர்.

யூடியூப் சேனல்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதில் டைட்டில் வின்னரான வனிதா, யூட்யூப் சேனல் தொடங்கி சமையல் நிக்ழச்சிகளை நடத்தி வருகிறார்.

பிரேக் அப் வீடியோ
அதில் அவ்வப்போது தனது பர்சனல் வீடியோக்களையும் போட்டு காசு பார்த்து வருகிறார். குறிப்பாக பீட்டர் பாலுடனான மூன்றாவது திருமணம், அவருடன் ரொமான்ட்டிக் நேர்க்காணல், அதனை தொடந்து அவர்களுடைய பிரேக் அப் என விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்.

வனிதா தர்பார்
அதுமட்டுமின்றி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்தும் வனிதா தர்பார் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகிறார். இதில் தவறு என படுபவர்களை கிழித்து தொங்கவிடுவது, சரியாக இருப்பவர்களை பாராட்டுவது என இருந்து வருகிறார்.

செருப்பால் அடிப்பேன்
அண்மையில் சனம் ஷெட்டி குறித்து பாலாஜி அவதூறாக பேசியது குறித்தும் குரல் கொடுத்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பாலாஜியை செருப்பால் அடிபேன் என்றும் சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததை பாலாஜி பார்த்தாரா என்றும் கழுவி ஊற்றினார்.

பாசி பருப்புல் சாம்பார்
வனிதாவின் வீடியோ வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் வனிதா. அதாவது நேற்று முன் தினம் பிக்பாஸ் வீட்டில் பாசி பருப்பை வைத்து மதிய சாப்பாட்டுக்கு சாம்பார் வைக்க முடியாது என கூறினார் அனிதா சம்பத்.

சொல்லி தர்றேன் கண்ணுக்குட்டி
அதனைக் கேட்ட நெட்டிசன்கள் பலரும் பாசி பருப்பில் சாம்பார் வைக்கலாம் என கூறியிருந்தனர். இந்நிலையில் வனிதாவும் அதுகுறித்து டிவிட்டியுள்ளார். அதாவது, தன்னுடைய வனிதா தர்பாரில் சொல்ல மறந்துவிட்டேன். அனிதா சம்பத் பாசி பருப்புல சாம்பார் வைக்கலாம் கண்ணுக்குட்டி.. நான் கற்று தருகிறேன்.. விரைவில் என டிவிட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











