உன் அம்மா தப்பு செஞ்சுருப்பாங்க.. பாலாஜியால் ஆவேசமான வனிதா.. பூதாகரமான பிக்பாஸ் பிரச்சனை!
சென்னை: சனம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் அழகிப் பட்டத்தை வென்றார் என்ற பாலாஜியை கடுமையாக விளாசியுள்ளார் வனிதா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் சனம் ஷெட்டிக்கும் பாலாஜிக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது.
அப்போது பாலாஜி சனம் ஷெட்டியை, அழகி பட்டத்தை பெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாகக் கூறியுள்ளார்.

அசிங்கமான வார்த்தைகள்
இதனை கோர்ட் டாஸ்க்கின் போது கம்ப்ளையன்ட்டாக எழுதினார் சனம் ஷெட்டி. அந்த புரமோ டெலிட் செய்யப்பட்ட போதும், சனம் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. அதில் பாலாஜி தன்னை பற்றி பேசிய அந்த அசிங்கமான வார்த்தைகளை குறிப்பிட்டுள்ளார் சனம்.

உடனடியாக வெளியேற்ற வேண்டும்
இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாலாஜிக்கு எதிராய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாலாஜியை பிக்பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பிறப்பில் ஏதோ தவறு
இந்நிலையில் சனம் ஷெட்டி குறித்து இழிவாக பேசியது குறித்து பாலாஜியை கடுமையாக விளாசியுள்ளார் நடிகை வனிதா. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாலாஜியின் பிறப்பில் ஏதோ தவறு இருக்கிறது என கூறியுள்ளார் வனிதா.

உங்க அம்மா தப்பு
மேலும் நான் ஓபனா சொல்கிறேன், எனக்கு கவலையில்லை.. உன் அம்மா தப்பு செஞ்சாங்கங்றதுக்காக மத்த பொம்பளைங்கள எப்படி நீ அப்படி பேசலாம். சனம் பத்தி அப்படி பேச உனக்கு என்ன துணிச்சல். சனமை எப்படி அப்படி பேசலாம்.

ஆவேசமான வனிதா
அவர் பேசியதை ஏற்கவே முடியாது.. சனம் மட்டும் இல்லை யாராக இருந்தாலும் பாலாஜி அப்படி பேசக்கூடாது. இவன்
பிறப்புல தப்பு இருக்கு. இவன் மத்த பொம்பளைங்கள தப்பு சொல்வான், அதை பார்த்துட்டு இருக்கனுமா என ஆவேசமாக விளாசியுள்ளார் வனிதா. வனிதாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











