என் கணவர் அதில் கிங்.. அதனால்தான் வனிதா அவரை மயக்கி விட்டார்.. கிழித்து தொங்கவிடும் ஹெலன்!
சென்னை: தன்னுடைய கணவர் அந்த விஷயத்தில் மிகவும் திறமைசாலி என்பதால்தான் நடிகை வனிதா அவரை மயக்கி விட்டார் என பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணமும் சர்ச்சையாகி இருக்கிறது. நடிகை வனிதா கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை மூன்றாவதாக திருமணம் கொண்டார்.
பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் பள்ளி செல்லும் ஒரு மகளும் உள்ளனர்.

போலீஸில் புகார்
முதல் மனைவியான எலிசபெத் ஹெலனை விவாகரத்து செய்யாமலேயே, பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 19ஆம் தேதியே வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார்.

ஹாட் டாப்பிக்
ஆனாலும் கடந்த சனிக்ககிழமை இருவரும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். வனிதாவின் மூன்றாவது திருமணமும் அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுமே தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ள நிலையில், எலிசபெத் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

மயக்கி விட்டார்
அதாவது, தனது கணவர் தன்னுடைய வேலையில் மிகவும் திறமைசாலி. எடிட்டிங் மட்டுமின்றி பல்வேறு வேலைகளையும் அறிந்தவர் பீட்டர் பால். இதனால்தான் தனது யூட்யூப் சேனலை நடத்த தன்னுடைய கணவரான பீட்டர் பாலை வனிதா மயக்கி திருமணம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

பீட்டர் பால் உதவி
பீட்டர் பாலுடனான திருமணத்திற்கு முன்பாகவே, அவருடனான காதல் குறித்து பேசிய நடிகை வனிதா தான் யூட்யூப் சேனல் தொடங்க பீட்டர் பால்தான் தனக்கு உதவியாக இருந்ததாகவும் அப்போதுதான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











