Don't Miss!
- News மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. டெல்லி நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஆஜர்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஹேட்டர்ஸ்க்கு செம கவுண்டர் கொடுத்த வனிதா.. தர்ஷன் விவகாரத்தை இழுத்து பதிலடி கொடுத்த நெட்டிசன்ஸ்
யூடியூப் பாடகி சுதாசினியின் ஹேட்லைன்பாடலை பகிர்ந்து, ஆன்லைனில் கேலி செய்பவர்களுக்கு கவுண்டர் கொடுத்துள்ளார் நடிகை வனிதா.
Recommended Video
சென்னை: ஆன்லைனில் கேலி செய்பவர்களுக்கு கவுண்டர் தரும் வகையில் நடிகை வனிதா வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்ற நாட்கள் எல்லாம் நெட்டிசன்களுக்கு கொண்டாட்ட காலம் தான். டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஹலோ ஆப் என வனிதாவை வெச்சு செய்யாத நாட்களே இல்லை.
பிக் பாஸ் வீட்டில் வனிதா வாயை திறந்த உடனே, நெட்டிசன்கள் ஆப்பை (செயலி) திறந்துவிடுவார்கள். கமெண்டுகளும், மீம்ஸ்களும் கொட்டிக்கொண்டே இருந்தன. மற்ற போட்டியாளர்களைவிட அதிக கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானது வனிதா தான்.
கலாய்க்கும் ஆன்லைன்வாசிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஆன்லைன்வாசிகளால் கலாய்க்கப்பட்டு வருகிறார் வனிதா. கஸ்தூரிக்கும், அவருக்கும் இடையிலான சண்டையில் கூட வனிதாவை செமையாக வெச்சு செய்தனர் நெட்டிசன்கள். இதனால் கஸ்தூரியின் டிவீட்களை பிளாக் செய்தார் வனிதா.
|
அப்யூசர்களுக்கு கவுண்டர்
இந்நிலையில் ஆன்லைன் அப்யூசர்ஸ்களை கவுண்டர் செய்யும்படியான வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வனிதா. அதில் "ஹேட்டர்ஸ், டிராலர்ஸ் மற்றும் சைகோ சாடிஸ்ட்டுகளுக்கு சரியான செருப்படி. உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களை பற்றி டிவீட் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இந்த உதவாக்கரை மக்களுக்கு சரியான கவுண்டர் இது", என வனிதா குறிப்பிட்டுள்ளார்.
|
ஹேட்லைன் பாடல்
வனிதா ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில், யூடியூப் பாடகி சுதாசினி ஆன்லைன் அப்யூசர்ஸ்களுக்காக பாடிய பாடல் இடம்பெற்றுள்ளது. வெறும் ஹேட் கமெண்ட்ஸ்களை மட்டுமே வைத்து அந்த பாடலை அவர் உருவாக்கியுள்ளார். " தயவுசெஞ்சு பாட்ட அசிங்கப்படுத்தாத... கீச் கீச்ன்னு கேட்குது, வெறி டேஞ்சரஸ் பேஸ் பயமா இருக்கு.. இவ்ளோ மேக்கப் தேவையில்ல பாட்டு பாடுவதற்கு..", இப்படி செல்கிறது அந்த பாடல்.
|
நெட்டிசன்கள் கேள்வி
ஆனால் வனிதாவின் இந்த டிவீட்டை அவருக்கு எதிராகவே திருப்பிவிட்டுவிட்டனர் நெட்டிசன்கள். " இந்த பாடல் உங்களுக்கு தான். தர்ஷன் பற்றி நெகட்வ் டிவீட் செய்வதற்கு முன்பு இந்த பாட்டை பார்த்திருந்தால் நீங்கள் திருந்தியிருப்பீர்கள். இப்போதாவது திருந்தினீர்களே" என வனிதாவை விளாசியுள்ளார் ஒருவர்.
|
உருக்கமான பதிவு
தொடர்ந்து ஆன்லைனில் டிரால் செய்யப்பட்டதால் தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பாப் பாடகி சல்லி இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதனை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.