Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இறால் பிரியாணி கேட்டார்.. 2 பேரும் ஒன்றாகதான் கிளம்பினோம்.. சித்து மரணம் குறித்து வனிதா உருக்கம்!
சென்னை: இறுதி நாள் ஷுட்டிங்கில் இருந்து சித்ராவும் தானும் ஒன்றாகதான் கிளம்பினோம் என பல உருக்கமான தகவல்களை கூறியுள்ளார் வனிதா.
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த புதன் கிழமை அதிகாலை மரணமடைந்தார்.
இந்த சுவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்கப் போகுதோ.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
நசரத்பேட்டையிலுள்ள ஓட்டலில் தனது வருங்கால கணவர் ஹேம்நாத் ரவியுடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

பட்டுச்சேலையில் தூக்கு
அறையில் இருந்த ஃபேனில் பட்டுச்சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஈ.வி.பி கார்டனில் விஜய் டிவியின் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த சித்ரா, படப்பிடிப்பு முடிந்து அதிகாலை 2.30 மணிக்கு ஹோட்டல் அறை திரும்பியுள்ளார்.

முன்னுக்குப் பின் முரண்
காலை 5 மணியளவில் ஹோட்டல் அறையில் இருந்த ஃபேனில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளார். ஹேம்நாத் கூறும் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால் அவரிடம் தொடர்ந்து 4வது நாளாக போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைதான்
சித்ராவும் ஹேம்நாத்தும் 2 மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துக் கொண்டது தெரிய வந்தது. இதனால் அவரின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன அழுத்தம் இல்லை
ஆனால் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சித்ரா பங்கேற்ற ஷுட்டிங்கில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரியவில்லை என அவருடன் ஷுட்டிங்கில் பங்கேற்ற சக நடிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நகக்கீறல்கள்..
அதேநேரத்தில் சித்ராவின் கன்னத்தில் காயங்கள் இருந்தது, சந்தேகத்தை கிளப்பியது. இருந்த போதும் அவரது முகத்தில் இருந்த காயங்கள் மற்றும் நகக்கீரல்கள் அவருடையதுதான் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சித்ராவின் மரணம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.

வனிதா உருக்கம்..
பிரபலங்கள் பலரும் அவருடன் இருந்த தருணங்களையும் இறுதியாக சந்தித்த நினைவுகளையும் கண்ணீருடன் பகீர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமார் சித்ரா உடன் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

என்ன ஆனது சித்ரா?
அதாவது இந்த வருடம் நான் கேட்ட மிக அதிர்ச்சிகரமான செய்தி இதுதான். சித்ரா, என்ன ஆனது? கடந்த வாரம்தான் அவர் விருந்தினராகப் பங்கேற்ற ‘கலக்கப் போவது யாரு' படப்பிடிப்பில் அவரைச் சந்தித்தேன்.

சந்தேகமாக இருக்கிறது
மிகவும் உற்சாகமான, துணிச்சலான, அழகான, மகிழ்ச்சியான பெண். அவர் ரேஷ்மாவை ஞாபகப்படுத்துவதாக அவரிடம் சொன்னேன். தற்கொலை ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னவோ சந்தேகமாக இருக்கிறது. சம்பவத்தன்று ஸ்டார் மியூஸிக் நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் இருந்தார்.

ஒரே நேரத்தில் கிளம்பினோம்
பக்கத்தில் இருந்த ‘கலக்கப் போவது யாரு' அரங்கில் அதே நேரத்தில் நானும் படப்பிடிப்பில் இருந்தேன். இருவரும் இரவு 2.30 மணியளவில் ஒரே நேரத்தில் கிளம்பினோம். அவர் தனது ஓட்டல் அறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா?

இறால் பிரியாணி கேட்டார்
என்னவோ தவறாக இருக்கிறது, எனக்குச் சரியெனத் தோன்றவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் கண்முன்னே அவ்வளவு உயிர்ப்புடன் இருந்தார் என்று கூறியுள்ளார். மேலும் சித்ரா தன்னிடம் இறால் பிரியாணி கேட்டார் என்றும் உருக்கமாக கூறியுள்ளார் வனிதா.