விஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதால் கடுப்பான வனிதா.. கஸ்தூரி ஒரு பாய்சன் என கடும் விமர்சனம்!
சென்னை: விஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து பேசியதற்காக நடிகை கஸ்தூரியை விஷம் என கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை வனிதா.
Recommended Video
நடிகை வனிதாவுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிலேயே இருவருக்கும் முட்டலும் மோதலுமாக இருந்தது.
கஸ்தூரி வனிதாவை வாத்து என்று கூறியதற்காக சர்ச்சைக்கு ஆளானார். அதன்பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இருவரும் சண்டை போட்டு வந்தனர்.

வாய்க்கு வந்தப்படி விமர்சனம்
வனிதாவின மூன்றாவது திருமண விவகாரத்தில் கூட பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் விவகாரத்தில் கஸ்தூரி அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதனால் கடுப்பான வனிதா கஸ்தூரியை ஃபிராடு, பைத்தியம், முட்டாள், காமெடி பீஸ் என வாய்க்கு வந்தப்படி விமர்சித்தார்.

விமர்சிப்பார்
பிரச்சனை வரும் போதெல்லாம், வனிதா கஸ்தூரியை பிளாக் செய்வதாக கூறி பிளாக் செய்வார். பின்னர் மீண்டும் அவர் டிவிட்டுகளை விமர்சிப்பார். இதேபோல் கடந்த வாரம் கஸ்தூரியை பிளாக் செய்தார் வனிதா. இந்நிலையில் தற்போது கஸ்தூரி விஜயலக்ஷ்மி குறித்து பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் வனிதா.

கஸ்தூரி பாய்சன்
விஜயலக்ஷ்மியின் குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான உதவியை செய்துள்ளேன் என குறிப்பிட்டிருந்தார் கஸ்தூரி. இதனை பார்த்த நடிகை வனிதா, கஸ்தூரியை விஷம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
போலி வக்கீல்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது.. ஓ மை காட்.. இந்த மக்களை பாருங்க.. இந்த போலி வக்கீல் விசாரணை ஸ்பெஷலிஸ்ட், எஃப்பிஐ ஆஃபிசர்... அவர் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார். எல்லா பிரபலங்களின் பர்சனல் குறித்து விசாரணை நடத்தவது பப்ளிக்கில் விவாதிப்பது, அவர்களை விமரசிப்பது. அவர் ஒரு பாய்சன் என கஸ்தூரியை விமர்சித்துள்ளார்.
ஏன் ஃபாலோ செய்கிறீர்கள்
வனிதாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள்தான் கஸ்தூரியை பிளாக் செய்துவிட்டேன் என்று கூறினீர்களே பின்னர் ஏன் அவர் டிவிட்டையெல்லாம் ஃபாலோ செய்கிறீர்கள் என சாடியிருக்கின்றனர்.
அதை கழுவுங்கள்
மற்றொரு நெட்டிசன் உங்களுக்கு ஏதோ மெண்டல் பிராப்ளம் இருக்கு என்று நினைக்கிறேன். உங்க அப்பாவோட பிரச்சனையில் இருந்து இப்போ வரை உங்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே காரி துப்பும் அளவுக்கு உள்ளது. உங்கள் பின்னால் நிறைய சாக்கடை உள்ளது முதலில் அதை கழுவுங்கள்.. என சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











