தம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா!
Recommended Video
சென்னை: நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா, கொளுத்திப் போட்டு சண்டை மூட்டி விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். வனிதாவின் நடவடிக்கையால் பிபி ஏறிய பார்வையாளர்கள் அவரை கண்ட மேனிக்கு கழுவி ஊற்றினர்.
வனிதாவை, சண்டைக்காரி, பஜாரி என்றெல்லாம் வாய்க்கு வந்தப்படி திட்டி தீர்த்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த போதும் வனிதா இதே வேலையைதான் செய்தார்.

கட்ஸி விருது
இதனால் பிக்பாஸ் சீசன் 3யில் அதிகமாக திட்டு வாங்கிய போட்டியாளர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர் வனிதா. இதற்காகவே அவருக்கு பிக்பாஸ் ஃபைனலின் போது கட்ஸி விருது கொடுக்கப்பட்டது.

கிண்டல் கேலி
இந்நிலையில் நெட்டிசன்களை கடுமையாக சாடியிருக்கிறார் வனிதா. அதாவது, கொரியன் பாப் பாடகியான 25 வயதான இளம்பெண் சல்லி, சமூக வலைதளங்களில் அதிகமாக கிண்டல் கேலிக்கு ஆளானார்.

மர்ம மரணம்
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சல்லி சியோலில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. சல்லி வீட்டிற்கு சென்ற, அவரது மேனேஜர் சல்லி இறந்துகிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தற்கொலை
சல்லியின் மரணம் குறித்து விசாரித்து வரும் போலீசார், சமூக வலைதளங்களால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வெட்கப்படனும்..
இந்த செய்தியை மேற்கோள் காட்டியுள்ள வனிதா, டிவிட்டர் குடும்பத்தில் உள்ள தம்பி தங்கைகளே, இதுபோன்றவற்றிற்கு நெட்டிசன்கள் தான் காரணம் என கூறப்படுவதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். மேலும் இது பிக்பாஸ் 3 அல்ல இது உண்மையான வாழ்க்கை என பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











